/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-11T174908.778.jpg)
IPL 2022 SRH vs GT Highlights in tamil: 15 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
குஜராத் அணியில் மேத்யூ வேட் - ஷுப்மன் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில் ஷுப்மன் கில் 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 2 பவுண்டரிகளை விரட்டிய நிலையில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவருடன் மறுமுனையில் இருந்து விளையாடிய தொடக்க வீரர் மேத்யூ வேட் 19 ரன்னிலும், டேவிட் மில்லர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த வீரர்களில், அணியின் அடுத்தடுத்த விக்கெட் இழப்பை தடுக்க உதவிய அபினவ் மனோகர், 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் பறக்கவிட்டு 35 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
குஜராத் அணி நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும் என்ற பொறுப்புடன் களத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசினார். அவர் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 1 சிக்ஸர் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.
That's a FIFTY for Skipper @hardikpandya7 off 42 deliveries.#TATAIPL#SRHvGTpic.twitter.com/Eh5mrxU4uJ
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
Innings Break!
50* from the Skipper propels @gujarat_titans to a total of 162/7 on the board.
Scorecard - https://t.co/phXicAbLCE#SRHvGT#TATAIPLpic.twitter.com/YEc9CTCgOH— IndianPremierLeague (@IPL) April 11, 2022
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா - கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகளை விளாசி 42 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த ராகுல் திரிபாதியுடன் சேர்ந்து ஜோடி அமைத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் கேப்டன் வில்லியம்சன். இந்த ஜோடியில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை துரத்தி 17 ரன்கள் சேர்த்த ராகுல் திரிபாதி காயம் காரணமாக ஓய்வுக்கு சென்றார். இதனால், பின்னர் வந்த நிக்கோலஸ் பூரானுடன் ஜோடி அமைத்தார் கேப்டன் வில்லியம்சன்.
ஃபெர்குசன் வீசிய 16வது ஓவரின் 3வது பந்தை சந்தித்த வில்லியம்சன் அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற அவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறப்பான பங்களிப்பை கொடுத்த அவர் 46 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 57 ரன்கள் எடுத்தார்.
That's a FIFTY for the #SRH Skipper.
Will he convert it into a match winning one?
Live - https://t.co/9CemDpHOvq#SRHvGT#TATAIPLpic.twitter.com/5OFiY6AJED— IndianPremierLeague (@IPL) April 11, 2022
மறுமுனையில் அணியை வெற்றி நோக்கி அழைச்செல்ல தயாராக இருந்த நிக்கோலஸ் பூரன் - ஐடன் மார்க்ரம் ஜோடியில் மார்க்ரம் பவுண்டரியையும், பூரன் சிக்ஸரையும் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தனர். இதனால், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் தொடரில் 2வது வெற்றியை ஐதராபாத் அணி பதிவு செய்துள்ளது. ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருந்த குஜராத் அணிக்கு இது முதல் தோல்வியாகும். ஆட்டத்தின் நாயகன் விருதை கேப்டன் வில்லியம்சன் தட்டிச் சென்றார்.
Nicholas Pooran hits the winnings runs as @SunRisers win by 8 wickets against #GujaratTitans
Scorecard - https://t.co/phXicAbLCE#SRHvGT#TATAIPLpic.twitter.com/F5o01VSEHv— IndianPremierLeague (@IPL) April 11, 2022
Kane Williamson is the Player of the Match for his match winning knock of 57 off 46 deliveries.
Scorecard - https://t.co/phXicAbLCE#SRHvGT#TATAIPLpic.twitter.com/5NKiEv7XVw— IndianPremierLeague (@IPL) April 11, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:25 (IST) 11 Apr 2022குஜராத்தை வீழ்த்திய ஐதராபாத் அணிக்கு அபார வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இது அந்த அணியின் 2வது வெற்றி ஆகும். நடப்பு சீசனில் தோல்வியை தழுவாமல் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த குஜராத் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
Nicholas Pooran hits the winnings runs as @SunRisers win by 8 wickets against gujarattitans
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
Scorecard - https://t.co/phXicAbLCEsrhvgttataiplpic.twitter.com/F5o01VSEHv - 23:13 (IST) 11 Apr 2022வெற்றியை நோக்கி ஐதராபாத் அணி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதன் 2வது வெற்றியை ருசிக்க இன்னும் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும். நிக்கோலஸ் பூரன் - ஐடன் மார்க்ரம் ஜோடி களத்தில் உள்ளனர்.
- 23:08 (IST) 11 Apr 2022அரைசதம் விளாசிய வில்லியம்சன் அவுட்; வெற்றியை நோக்கி ஐதராபாத்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். அவர் 46 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 57 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
வெற்றியை நோக்கி பயணித்து வரும் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள் தேவை.
- 22:59 (IST) 11 Apr 202215 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிபாதி காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் நிக்கோலஸ் பூரன் கேப்டன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
ஐதராபாத் அணி தற்போது 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 47 ரன்கள் தேவை.
- 22:22 (IST) 11 Apr 2022முதல் விக்கெட்டை இழந்த ஐதராபாத்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்துள்ளது. எனினும் அந்த அணியில் அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகளை விளாசி 42 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐதராபாத் அணி தற்போது 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை சேர்த்துள்ளது.
Rashid Khan gets the breakthrough and Abhishek Sharma departs for 42.
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
Live - https://t.co/phXicAbLCEsrhvgttataiplpic.twitter.com/InMYgKvZkv - 22:13 (IST) 11 Apr 2022ஐதராபாத் அணிக்கு வலுவான தொடக்கம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 37 ரன்களுடனும், கேப்டன் கேன் வில்லியம்சன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை சேர்த்துள்ளது.
- 21:34 (IST) 11 Apr 2022அரைசதம் விளாசிய கேப்டன் பாண்டியா; ஐதராபாத்-க்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
50* from the Skipper propels @gujarat_titans to a total of 162/7 on the board.
Scorecard - https://t.co/phXicAbLCEsrhvgttataiplpic.twitter.com/YEc9CTCgOH - 21:27 (IST) 11 Apr 202215 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!
- 20:05 (IST) 11 Apr 2022பவர் பிளே முடிவில் குஜராத் அணி!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது. மேத்யூ வேட் - ஹர்திக் பாண்டியா ஜோடி களத்தில் உள்ளனர்.
- 19:51 (IST) 11 Apr 2022கில் அவுட்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ வேட் - ஷுப்மன் கில் ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய ஷுப்மன் கில் 9 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
- 19:49 (IST) 11 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐதராபாத் – குஜராத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், குஜராத் அணியில் மேத்யூ வேட் - ஷுப்மன் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்
- 19:45 (IST) 11 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐதராபாத் – குஜராத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், குஜராத் அணியில் மேத்யூ வேட் - ஷுப்மன் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்
- 19:25 (IST) 11 Apr 2022சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்!
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்
- 19:25 (IST) 11 Apr 2022குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்!
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே
- 19:23 (IST) 11 Apr 2022டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு; குஜராத் முதலில் பேட்டிங்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 21-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சுவதாக அறிவித்தார். இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியினர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குவர்.
- 18:56 (IST) 11 Apr 2022பிட்ச் ரிப்போர்ட்!
கடந்த ஆட்டத்தில் இருந்த ஆடுகளத்தை விட இம்முறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. களத்தில் புல் அதிகமாக காணப்படுகிறது. சற்று பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இந்த மைதானத்தில் விக்கெட்க்கு நேரான தொலைவு குறைவு. எனவே பேட்டர்கள் நேராக பவுண்டரியை முயற்சிப்பார்கள். களம் மிகவும் உலர்ந்ததாகத் தெரிகிறது, எனவே ஸ்பின்னர்கள் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆடுகளத்தில் தான் ஐதராபாத் அணி அதன் முந்தைய ஆட்டத்தில் சென்னையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- 18:26 (IST) 11 Apr 2022தமிழ்நாடு கில்லிஸ்!
ஐதராபாத் - குஜராத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னதாக, இரு அணிகளில் இடம்பிடிதுள்ள தமிழ்நாடு வீரர்கள் பயிற்சியின் போது சந்தித்து கொண்டார்கள். புகைப்படத்தில் இடப்புறமிருந்து விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்.
Chepauk Parambarai 🙌seasonoffirstsaavadetataiplpic.twitter.com/0DM6GJBVnW
— Gujarat Titans (@gujarat_titans) April 10, 2022 - 17:48 (IST) 11 Apr 2022குஜராத் டைட்டன்ஸ்அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ஷுப்மன் கில், மேத்யூ வேட் (கேப்டன்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே
- 17:47 (IST) 11 Apr 2022சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், டி நடராஜன், உம்ரான் மாலிக்/கார்த்திக் தியாகி
- 17:44 (IST) 11 Apr 2022சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் பட்டியல்!
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன், ஷ்ரேயாஸ் கோபால், ஜெகதீஷா சுசித், சமர்த், க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத், பிரியம் கார்க், கார்த்திக் தியாகி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அப்துல் சமத், சவுரப் துபே.
Excited, prepared and ready to face the Titans tonight 💪srhvgtorangearmyreadytorisetataiplpic.twitter.com/iZcCOo7uEs
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022 - 17:42 (IST) 11 Apr 2022குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!
மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், வருண் ஆரோன், விருத்திமான் சாஹா, பிரதீப் சங்வான், குர்கீரத் சிங் மான், அல்ஜாரி ஜோசப், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ரஹ்மானுல்லா குர்பாஸ், டொமினிக் டிரேக்ஸ், யாஷ் தயாள், நூர் அகமது.
Alzarri Joseph remembering his record-breaking spell against SRH 🔥aavadesrhvgtseasonoffirstspic.twitter.com/ZT7M9708Af
— Gujarat Titans (@gujarat_titans) April 11, 2022 - 17:41 (IST) 11 Apr 20227:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 21-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
A swift return to action for the risers in a quest for another victory 🧡srhvgtorangearmyreadytorisetataiplpic.twitter.com/kWXr3Td639
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022 - 17:24 (IST) 11 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஐதராபாத் - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.