IPL 2022, SRH vs LSG highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 12வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய குயின்டன் டி காக், பின்னர் வந்த எவின் லூயிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசி 10 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்களை சேர்த்து தடுமாறியது.
இந்த தருணத்தில் களமிறங்கிய தீபக் ஹூடா கேப்டன் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டெடுத்தது. இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹூடா 33 பந்துகளில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகள் விளாசி தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 51 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பிறகு களத்தில் இருந்த கேப்டன் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 50 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளை விளாசி 68 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இதனால், ஐதராபாத் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஐதராபாத் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நடராஜன், ரொமாரியோ ஷெப்பர்ட், மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Its time to defend with all our Super Giant might.
— Lucknow Super Giants (@LucknowIPL) April 4, 2022
Over to the bowlers now!#AbApniBaariHai #bhaukaalmachadenge#IPL2022 🏆 #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/w6jDXvtGDr
தொடர்ந்து 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்னிலும், அபிஷேக் சர்மா 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த ஐடன் மார்க்ரம் – ராகுல் திரிபாதி ஜோடியில், மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழக்க, திரிபாதி அதிரடி கலந்த நிதானத்தை தொடர்ந்திருந்தார். அவர் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த வீரர்களில் அணிக்கு வெற்றி நம்பிக்கை அளித்த நிக்கோலஸ் பூரன் 34 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 1 சிக்ஸர் அடித்த ரொமாரியோ ஷெப்பர்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஐதராபாத் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோ அணி ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
The Super Giants dug deep and fought through out the match to turn around the fixture in their favour.
— Lucknow Super Giants (@LucknowIPL) April 4, 2022
An overall power packed performance from the boys.
Up and onwards to the next fixture!#AbApniBaariHai #bhaukaalmachadenge#IPL2022 #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow pic.twitter.com/IggyUsCQGJ
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 2 தோல்விகளுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 வது இடத்தில் உள்ளது.
பந்துவீச்சில் ஆட்டத்தில் திரும்பு முனையை ஏற்படுத்திய அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
We asked him what was up his sleeve and he said ONE MORE!
— Lucknow Super Giants (@LucknowIPL) April 4, 2022
Its 4!@Avesh_6 is on a roll.#AbApniBaariHai #bhaukaalmachadenge#IPL2022 🏆 #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/uEQVzidagK
The BIG man from west indies @Jaseholder98 takes another one and rounds his tally up to 2.
— Lucknow Super Giants (@LucknowIPL) April 4, 2022
Its looking good for us.#AbApniBaariHai #bhaukaalmachadenge#IPL2022 🏆 #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 pic.twitter.com/j2MwPu3l8D
Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai 21 May 2022
Sunrisers Hyderabad 157/9 (20.0)
Lucknow Super Giants 169/7 (20.0)
Match Ended ( Day – Match 12 ) Lucknow Super Giants beat Sunrisers Hyderabad by 12 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் ஆவேஷ் கான் வேகத்தில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த அப்துல் சமத் அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது அந்த அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், 15 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் எடுத்துள்ளது.
ஐதராபாத் வெற்றிக்கு 30 பந்துகளில் 50 ரன்கள் தேவை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ராகுல் திரிபாதி 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது அந்த அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், 8 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதன் முதலாவது விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேப்டன் ராகுல் (68), தீபக் ஹூடா (51) அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை சேர்த்துள்ளது.
எனவே, ஐதராபாத் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நடராஜன், ரொமாரியோ ஷெப்பர்ட், மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி தற்போது 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை சேர்த்துள்ளது.
அரைசதம் கடந்த கேப்டன் ராகுல் – தீபக் ஹூடா ஜோடியில், ஹூடா 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தீபக் ஹூடா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அவருடன் கேப்டன் ராகுல் இணைந்து அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து வருகின்றனர்.
லக்னோ அணி தற்போது 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் ராகுல் (46) மற்றும் தீபக் ஹூடா (33) களத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் ராகுல் மற்றும் தீபக் ஹூடா களத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை துரத்திய மனிஷ் பாண்டே 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் விக்கெட்டுக்கு பின்னர் வந்த எவின் லூயிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் இன்றை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
இதன்படி, லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் – குயின்டன் டி காக் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்
A look at the Playing XI for #srhvlsg Live – https://t.co/89IMzVls6f #srhvlsg #tataipl pic.twitter.com/rmZI4Tpxfa
— IndianPremierLeague (@IPL) April 4, 2022
கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 12வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
#srh have won the toss and will bowl first against #lsg.Live – https://t.co/89IMzVlZVN #srhvlsg #tataipl pic.twitter.com/ZDxKAoqCeN
— IndianPremierLeague (@IPL) April 4, 2022
கிரிக்கெட்டில் யார்க்கர் மன்னன் என்று வர்ணிக்கப்படும் தமிழக வீரர் நடராஜன் இன்று தனது 32வது பிறந்தநாள் விழாவை ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினருடன் கொண்டாடினார்.
His bowling takes the cake in the death overs. But his face takes the cake on his birthday. 🎂😂A very happy birthday to our Yorker King, @Natarajan_91. 🧡#orangearmy #readytorise #tataipl pic.twitter.com/J0XAwYnehS
— SunRisers Hyderabad (@SunRisers) April 4, 2022
கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்
We pray together.We play together,We fight together. #bhaukaalmachadenge आज रात – साढ़े साथ#abapnibaarihai💪#ipl2022 🏆 #lucknowsupergiants #t20 #tataipl #lucknow #uttarpradesh #lsg2022 pic.twitter.com/tQAEApL81J
— Lucknow Super Giants (@LucknowIPL) April 4, 2022
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
Various moods ahead of matchday 😃#srhvlsg #orangearmy #readytorise #tataipl pic.twitter.com/uKKOcYZRYJ
— SunRisers Hyderabad (@SunRisers) April 4, 2022
கே.எல். ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஷாபாஸ் நதீம், கிருஷ்ணப்பா கவுதம் , அங்கித் ராஜ்பூத், மொஹ்சின் கான், கரண் ஷர்மா, மயங்க் யாதவ், கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா
கேன் வில்லியம்சன்(கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், ஷ்ரேயாஸ் கோபால், ஜெகதீஷா சுசித் பிலிப்ஸ், ஷஷாங்க் சிங், ரவிக்குமார் சமர்த், விஷ்ணு வினோத், பிரியம் கார்க், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, மார்கோ ஜான்சன், சவுரப் துபே
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 12வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
Positive vibes before #matchday, and confident in our preparations 💪#srhvlsg 🔜#orangearmy #readytorise #tataipl pic.twitter.com/yGljnCKtNA
— SunRisers Hyderabad (@SunRisers) April 4, 2022
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஐதராபாத் – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.