இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகம்… சி.எஸ்.கே-வுக்கு முக்கிய துருப்புச் சீட்டு ரகானே!
ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'இம்பேக்ட் பிளேயர்' விதி சென்னை அணி மினி ஏலத்தில் வாங்கிய அஜிங்க்யா ரஹானேவை ஒரு மதிப்புமிக்க வீரராக ஆக்குகிறது.
ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'இம்பேக்ட் பிளேயர்' விதி சென்னை அணி மினி ஏலத்தில் வாங்கிய அஜிங்க்யா ரஹானேவை ஒரு மதிப்புமிக்க வீரராக ஆக்குகிறது.
IPL 2023, Chennai Super Kings Ajinkya Rahane Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (மார்ச் 31ம் தேதி) தொடங்குகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆட்டத்திற்காக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Advertisment
சென்னையில் ஆட்டம்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் வழக்கம் போல் சொந்த மண்ணில் மற்றும் வெளியே அணிகள் தங்களின் எதிரணிகளுடன் மல்லுக்கட்ட உள்ளன. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 7 போட்டிகளை அதன் கோட்டையான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாட உள்ளது. இங்கு நடந்த 56 போட்டிகளில் சென்னை அணி 40-ல் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 71.42 என ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.
Advertisment
Advertisements
எனவே, நடப்பு சீசனிலும் சென்னை அணி அதன் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். அதற்கு ஏதுவாக சென்னை அணி தரமான, உயர்தர மற்றும் அனுபவம் வாய்ந்த டி20 சுழற்பந்து வீச்சாளர்களால் நிரம்பியுள்ளது. மகேஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் மற்றும் மொயீன் அலி போன்ற தந்திரமான, துல்லியமான வெள்ளை-பந்து பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் எதிரணியின் இன்னிங்ஸைத் திணறடிப்பதோடு, பவர்பிளேயில் எதிரணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி ரன் சேர்க்க தடுமாற வைக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், இடது கை (LH) மற்றும் வலது கை (RH) சுழற்பந்து வீச்சாளர்களின் சீரான கலவையானது வலுவான பந்துவீச்சு வரிசையை உருவாக்க ஒரு புத்திசாலித்தனமான வழியாகும். இது பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாமல், சேப்பாக் ஆடுகளத்தில் RH அல்லது LH-ஹெவி பேட்டிங் ஆர்டருக்கு எதிரான மேட்ச்அப்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம்பேக்ட் பிளேயர்
ஐ.பி.எல். தொடரில் இம்முறை போட்டியின் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்க செய்யும் வகையில் 'தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்' (இம்பேக்ட் பிளேயர்) என்ற புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி, சென்னை அணி மினி ஏலத்தில் வாங்கிய அஜிங்க்யா ரஹானேவை ஒரு மதிப்புமிக்க வீரராக மாற்றுகிறது. ஏனென்றால், மெதுவான மற்றும் திருப்பம் நிறைந்த ஆடுகளங்களில் அவரது நுட்பமான ஆட்டம் சென்னை அணிக்கு கை கொடுக்கும். குறிப்பாக குறைந்த ஸ்கோரிங் சேஸ்களில் அணியில் சரிவு ஏற்பட்டால் அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பார்.
சென்னை அணி அகமதாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் அதன் வெளி போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.