IPL 2023, CSK full squad, Mukesh Choudhary’s replacement TAMIL NEWS: 10 அணிகள் களமாடும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31-ந் தேதி) முதல் தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கடந்த ஆண்டு இறுதியில் கேரளாவின் கொச்சியில் நடந்த மினி ஏலத்தில் சென்னை அணி இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது. அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட அவர், ஐபிஎல் 2023 ஏலத்தில் 3வது அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக உள்ளார். அவரை வாங்கிவதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் சென்னை அணி ஏலப் போரை நடத்தி கைப்பற்றி இருந்தது.
கொச்சியில்நடந்த ஏலத்தில் சென்னை அணி (சி.எஸ்.கே) வாங்கிய வீரர்களின் முழு பட்டியல்:
பென் ஸ்டோக்ஸ் (ரூ. 16.25 கோடி), கைல் ஜேமிசன் (ரூ. 1 கோடி), பகத் வர்மா (ரூ. 20 லட்சம்), அஜய் மண்டல் (ரூ. 20 லட்சம்), நிஷாந்த் சிந்து (ரூ. 60 லட்சம்), ஷேக் ரஷீத் (ரூ. 20 லட்சம்), அஜிங்க்யா ரஹானே (ரூ 50 லட்சம்)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:
எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்ஜேத் சௌத்ரி, முகேஷ் சிம்ஜேத், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா
மீதமுள்ள பர்ஸ்: ரூ.1.5 கோடி
மொத்த பிளேயர் ஸ்லாட்டுகள்: 0
வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 0
முகேஷ் சவுத்ரி இடத்தில் யார்?
வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி 2023 ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஆகாஷ் சிங், முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 9 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் ஐந்து முதல் தர ஆட்டங்களுக்கு கூடுதலாக 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரை சென்னை அணி அவரின் அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு எடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil