ஐபிஎல் 2023 கோலாகல தொடக்கம்: சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஜடேஜா ஸ்பெஷல் மெசேஜ்

சி.எஸ்.கே அணி குஜராத்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் களமாடும் நிலையில், ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.

IPL 2023, GT vs CSK: Jadeja shares special message for CSK Fans TAMIL NEWS
IPL 2023, GT vs CSK: Ravindra Jadeja shares special message for Chennai Super Kings fans ahead of season opener TAMIL NEWS

IPL 2023, GT vs CSK, Ravindra Jadeja shares special message for  Fans TAMIL NEWS: ஐ.பி.எல் 2023 (இந்தியன் பிரிமீயர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இங்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆட்டத்திற்காக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார். சென்னை அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் கேப்சனில் “ஜட்டு பாய் உங்களுக்காக ஒரு மெசேஜ் கூறியுள்ளார் அகமதாபாத்!” என்று குறிப்பிடப்பட்டுளள்து.

அந்த வீடியோவில் ஜடேஜா, “கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, இது முதல் ஐபிஎல் சீசன். ஸ்டேடியம் முழுதும் நிரம்பிய ரசிகர்கள் முன் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறோம். அது எப்போதும் ஒரு சிறந்த உணர்வு. அனைத்து குஜராத்தி சி.எஸ்.கே ரசிகர்களும் ஸ்டேடியத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். . விசில் போடு.

நாங்கள் சமீபத்தில் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினோம், அகமதாபாத் ரசிகர்கள் தங்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதை உணர்ந்தோம். குறிப்பாக, அவர்கள் எங்களுக்கு ஆதரவாக வெளியே வரும்போது, ​​அவர்கள் மைதானத்திற்குள் உள்ள சூழலை முற்றிலும் மாற்றுகிறார்கள். மேலும் ஏராளமான ரசிகர்கள் வந்து தங்கள் சொந்த அணியை ஆதரிக்கும் ஒரு மைதானம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மைதானம் இருப்பது பெருமைக்குரிய விஷயம். எனவே, அனைத்து குஜராத்தி ரசிகர்களும் வந்து சிஎஸ்கேக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2023 சீசனுக்காக ஜடேஜாவை ரூ.16 கோடிக்கு சி.எஸ்.கே தக்கவைத்துக் கொண்டது. இவர் சமீபத்தில் இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஜடேஜா 210 ஐபிஎல் போட்டிகளில் 2502 ரன்களும், 132 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 5வது ஐ.பி.எல் பட்டத்துக்கான தேடலில் சென்னை அணி இருக்கும் நிலையில், அதை வெல்ல ஜடேஜா உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2023-க்கான சி.எஸ்.கே அணி வீரர்கள் பட்டியல்:

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங், அஜினக்யா ரஹூன், சுப்ராபதி சிங் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர், பகத் வர்மா, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிசண்டா மகலா மற்றும் ஆகாஷ் சிங்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 gt vs csk jadeja shares special message for csk fans tamil news

Exit mobile version