IPL 2023 KKR vs RCB Live Score Updates in Tamil: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது.
Indian Premier League, 2023Eden Gardens, Kolkata 09 June 2023
Kolkata Knight Riders 204/7 (20.0)
Royal Challengers Bangalore 123 (17.4)
Match Ended ( Day – Match 9 ) Kolkata Knight Riders beat Royal Challengers Bangalore by 81 runs
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், அடுத்த வந்த மந்தீப் சிங் ரன்கணக்கை தொடங்காமலும், கேப்டன் ரானா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் குர்பாஸ் அரைசதம் கடந்த நிலையில், 44 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிங்கு சிங் அரைசதத்தை நெருங்கிய நிலையில், 33 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன்பிறகு வந்த அதிரடி வீரர் ரசல் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் கொல்கத்தா அணி சவாலான ஸ்கோரை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷெர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்துள்ளது.
7-வது விக்கெட்டாக வீழ்ந்த தாகூர் 29 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணியில் குர்பாஸ், ரிங்கு சிங், தாகூர் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்கை தாண்டவில்லை. பெங்களூர் அணி தரப்பில், கரன் சர்மா வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பிரோஸ்வெல், ஹர்ஷெல், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 205 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட்கோலி டூபிளசிஸ் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இதில் விராட்கோலி 21 ரன்களிலும், டூபிளசிஸ் 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 23 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய புரூஸ்வெல் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூர் அணி கடைசி வரை நிமிரை முடியவில்லை. இதனால் 17.4 ஓவர்களில் பெங்களூர் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஆகாஷ்தீப் 8 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டெவிட்ட வில்லி 20 பந்துகளில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் வருன் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சூயஷ் சர்மா 3 விக்கெட்டுகளும், நரேன் 2 விக்கெட்டுகளும், தாகூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil