IPL 2023 Live Score, Delhi Capitals vs Kolkata Knight Riders Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி டெல்லி அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 4 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் (0), கேப்டன் ரானா (4), மந்தீப் சிங் (12), ரின்கு சிங் (6) நரேன் (4) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய ஜோசன் ராய் அவ்வப்போது பவுண்டரி அடித்து சற்று ஆறுதல் அளித்தார். தற்போது 12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அணியில் அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஜோசன் ராய் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக 4 சிக்சர்கள் விளாசிய ரஸல் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 127 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
டெல்லி அணி தரப்பில், குல்தீப், அக்சர், இஷாந்த், ஆன்ரிச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 128 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.
ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அணியில் அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஜோசன் ராய் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக 4 சிக்சர்கள் விளாசிய ரஸல் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 127 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணி தரப்பில், குல்தீப், அக்சர், இஷாந்த், ஆன்ரிச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 128 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ப்ரித்வி ஷா 13 ரன்களிலும், அடுத்த வந்த மீச்செல் மார்ஷ் 2 ரன்களிலும், பிலிப் சால்ட் 5 ர்களிலும் வெளியேறினர். சிறிது நேரம் விளையாடிய மணிஷ் பாண்டே 23 பந்துகளில் 21 ரன்களும், அக்கிம் கான் ரன்கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் லலித் யாதவ் இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முயன்றனர். அதற்கு ஏற்றார்போல் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் சில அவுட் வாய்ப்புகளை தவறவிட்டார். இதனால் கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரு பந்துகளில் 4 ரன்கள் கிடைத்தது. ஆனால் 2-வது பந்து நோபாலாக வந்ததால் அடுத்து பந்தில் 2 ரன்கள் எடுத்த அக்சர் பட்டேல் டெல்லி அணிக்கு இந்த சீசனில் முதல் வெற்றியை தேடி கொடுத்தார்.
192 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல வெற்றி பெற்றது. அக்சர் பட்டேல் 22 பந்துகளில் 19 ரன்களும், லலித் யாதவ் 4 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். கொல்கத்தா அணி தரப்பில், சக்ரவர்த்தி, அக்குள்ராய், ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டகள் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.