scorecardresearch

CSK vs GT Live Streaming: சி.எஸ்.கே- குஜராத் இன்று மோதல்; ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆன்லைனில் எப்படி இந்த போட்டியை காண்பது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ipl

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆன்லைனில் எப்படி இந்த போட்டியை காண்பது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி. எல் போட்டி என்றால் தோனியின் ஆட்டம் குறித்தான எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். இந்நிலையில் இன்று தோனி விளையாடுவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது தோனி விளையாடவில்லை. அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.

எதிரணியாக இருக்கும்  குஜராத் டைட்டன்ஸை ஹர்திக் பாண்டியா முன்னெடுத்து செல்கிறார். இதுவரை இந்த இரண்டு அணிகளுக்குள் நடைபெற்ற ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ்-தான் வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாடு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் காணலாம்.

இந்த போட்டியின் லைவ்-வை, ஜியோ சினிமாஸ் செயலி, இந்தியாவில் உள்ள இணையதளத்தில் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 live streaming details when and where to watch chennai super kings vs gujarat titans