scorecardresearch

SRH vs MI Highlights: பேட்டிங், பவுலிங்கில் அசத்திய மும்பை; 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்-ஐ வீழ்த்தி அபார வெற்றி

கிரீன், திலக் வர்மா அதிரடி ஆட்டம்; பந்துவீச்சிலும் அசத்திய மும்பை; மயங்க் போராட்டம் வீண்; 14 ரன்களில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி

Ipl 2023 match 25th sunrisers hyderabad vs mumbai indians live score and updates in tamil
IPL 2023, SRH vs MI Live Score Updates: Sunrisers Hyderabad vs Mumbai Indians from Rajiv Gandhi International Stadium, Hyderabad.

IPL 2023 Sunrisers Hyderabad vs Mumbai Indians Scorecard Updates in tamil: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. சம பலத்துடன் வலம் வரும் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2023Rajiv Gandhi International Stadium, Hyderabad   05 June 2023

Sunrisers Hyderabad 178 (19.5)

vs

Mumbai Indians   192/5 (20.0)

Match Ended ( Day – Match 25 ) Mumbai Indians beat Sunrisers Hyderabad by 14 runs

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

டாஸ் வென்ற ஐதராபாத் பவுலிங் தேர்வு; மும்பை முதலில் பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்.

மும்பை பேட்டிங்

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினார். ரோகித் பவுண்டரிகளாக விளாசினர். 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ரோகித் அவுட் ஆனார். நடராஜன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய கீரின் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இதற்கிடையில் சிறப்பாக ஆடி வந்த இஷான் கிஷன் 38 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சூர்யகுமார் 7 ரன்களில் வெளியேறினார். இந்தநிலையில் கிரீன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் ஹைதராபாத் பந்துவீச்சை நொறுக்கினர். கிரீன் அரைசதம் அடித்து அசத்தினார். அணியின் எண்ணிக்கை 151 ஆக இருந்தப்போது திலக் அவுட் ஆனார். அவர் 17 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த டிம் டேவிட் 16 ரன்கள் எடுத்து, கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இதனால் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்துள்ளது. ஹைதராபாத் தரப்பில் ஜென்சன் 2 விக்கெட்களையும், புவனேஷ்வர் மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஹைதராபாத் பேட்டிங்

ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி புரூக் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினார். ஹாரி புரூக் 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 7 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் மயங்க் அகர்வால் சற்று அதிரடியாக ஆடி வந்தார். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்தநிலையில் களமிறங்கிய மார்க்ரம் நிதானமாக விளையாடி, மயங்க் அகர்வாலுக்கு கம்பெனி கொடுத்தார். மயங்க் பவுண்டரிகளாக அடித்தார். அணியின் எண்ணிக்கை 71 ஆக இருந்தப்போது 22 ரன்களில் மார்க்ரம் அவுட் ஆனார். அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா 1 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கிளாசன் மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடி வந்த கிளாசன் 36 ரன்களில் அவுட் ஆனார். 16 பந்துகளைச் சந்தித்த கிளாசன் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்தார். அடுத்து அப்துல் சமத் களமிறங்கிய சிறிது நேரத்திலே, அரை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட மயங்க அகர்வால் 48 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜென்சன் 3 பவுண்டரிகள் விளாசி, 13 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்ததாக புவனேஷ்வர் களமிறங்கிய நிலையில், கடைசி ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அர்ஜூன் டெண்டுல்கர் வீசினார். இந்தநிலையில் 2 ஆவது பந்தில் சமத் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து மார்க்கண்டே களமிறங்கினார். 5 ஆவது பந்தில் புவனேஷ்வர் அவுட் ஆக ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை தரப்பில், பெண்ட்ரஃப், மெரிடித், சாவ்லா தலா 2 விக்கெட்களையும், அர்ஜூன், கிரீன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மும்பை 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் 9 ஆம் இடத்தில் நீடிக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 match 25th sunrisers hyderabad vs mumbai indians live score and updates in tamil