scorecardresearch

பந்துவீச்சில் மிரட்டிய போல்ட், சாஹல்… டெல்லியை சாய்த்த ராஜஸ்தானுக்கு அபார வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL 2023, RR vs DC match highlights in tamil
RR vs DC match highlights in tamil

IPL 2023, RR vs DC match highlights in tamil: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அரைசதம் விளாசிய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களும், ஜோஸ் பட்லர் 79 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணியில் பிருத்வி ஷா ரீலி ரோசவ் 14 ரன், லலித் யாதவ் 38 ரன், அக்சர் படேல் 2 ரன், ரோவ்மன் பவல் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வார்னர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி 3 ஆட்டங்களில் ஆடி 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து, பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 rr vs dc match highlights in tamil