scorecardresearch

RR vs PBKS Highlights: கடைசிவரை திக்.. திக்.. ராஜஸ்தான் ராயல்ஸை 5 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.

ipl 2023 rr vs pbks live score match online scorecard at barsapara cricket stadium guwahati in tamil
 ஐபிஎல் 2023 ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர்

 IPL 2023, RR vs PBKS Match Score Updates in Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

Indian Premier League, 2023Barsapara Cricket Stadium, Guwahati   08 June 2023

Rajasthan Royals 192/7 (20.0)

vs

Punjab Kings   197/4 (20.0)

Match Ended ( Day – Match 8 ) Punjab Kings beat Rajasthan Royals by 5 runs

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் பிரபாசிம்ரன்சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பிரபாசிம்ரன் ஒருபக்கம் அதிரடியில் மிரட்ட மறுபுறம் தவான் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய பிரபாசிம்ரன் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்த நிலையில்,  34 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்த பிரபசிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்ஷே 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்து ஜெதீஷ் சர்மா 16 பந்துகளில் 2 பவுணட்டரி 1 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நங்கூரம் போட்டி கேப்டன் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமனையில் சிக்கந்தர் ராசா 1 ரன்னிலும், ஷாருக்கான் 11 ரன்களிலும், ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது.

கடைசி வரை களத்தில் இருந்த தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86 ரன்கள் எடுத்தார். சாம் கரன் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 198 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் ரன் கணக்கை தொடங்காமலேயே பெவிலியன் திரும்பினார். மற்றொ தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 11 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜோஸ் பட்லர் 19 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய கேப்டன் சாம்சன், 25 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 ரன்களும், மந்தமான விளையாடிய படிக்கல் 26 பந்துகளில் 21 ரன்களும், ரியான் பராக் 12 பந்துகளில் 20 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால ராஜஸ்தான் அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹெட்மயர் ஜருள் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய சாம்கரன், முதல்பந்தில் ஒரு ரன் 2-வது பந்தில் 2 ரன்கள் கொடுத்த நிலையில், 3-வது பந்தில் 2 ரன்களுக்கு ஆசைப்பட்டு ஹெட்மயர் ரன்அவுட் ஆனார்.

தொடர்ந்து 4-வது பந்தில் ஒரு ரன் கிடைத்த நிலையில், கடைசி 2 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5-வது பந்தை சந்தித்த ஹோல்டர் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி பந்தில் ஜருள் பவுண்டரி அடித்ததால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 rr vs pbks live score match online scorecard at barsapara cricket stadium guwahati in tamil