IPL 2023, RR vs RCB Cricket Match Score in Tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் 60-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். கோலி நிதானமாக ஆட, டூபிளசிஸ் அதிரடி ஆடி ரன் குவித்தார். கோலி 18 ரன்களில் அவுட் ஆக மேக்ஸ்வெல் களமிறங்கினார். மேக்ஸ்வெல் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி அதிரடி காட்டினார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. பெங்களூரு அணி 119 ரன்கள் எடுத்திருந்தப்போது, சிறப்பாக ஆடி வந்த டூபிளசிஸ் 55 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய லோம்ரோர் 1 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் டக் அவுட்டும் ஆகினர்.
அடுத்ததாக பிரேஸ்வெல் களமிறங்கிய நிலையில் அரைசதம் அடித்திருந்த மேக்ஸ்வெல் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 33 பந்தில் 54 ரன்கள் அடித்தார். இதில் 3 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பிரேஸ்வெல் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். அனுஜ் ராவத் 11 பந்தில் 29 ரன்கள் விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். ராஜஸ்தான் தரப்பில் ஜாம்பா, ஆசிப் தலா 2 விக்கெட்களையும், சந்தீப் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் பேட்டிங்
172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அடுத்து ஜோ ரூட் களமிறங்கி நிதானமாக ரன் சேர்க்கை முயல, மறுமுனையில் களமிறங்கிய படிக்கல் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ஹெட்மயர் களமிறங்கி அதிரடியாக ஆடினார். சிக்சர்களாக அடித்து ரன் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் ஆடிவந்த ரூட் 10 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய துருவ் 1 ரன்னிலும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். 4 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி அடித்த ஹெட்மயர் 35 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜாம்பா 2 ரன்களிலும், ஆசிப் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக ராஜஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு தரப்பில் பார்னெல் 3 விக்கெட்களையும், பிரேஸ்வெல், கரண் சர்மா தலா 2 விக்கெட்களையும், சிராஜ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் பெங்களூரு 5 ஆம் இடத்தில் உள்ளது.
பிளே- ஆப் சுற்றுக்கான போட்டி தொடங்கியுள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ஃபாமுக்கு திரும்பிய டு பிளெசிஸ் 11 இன்னிங்ஸ்களில் 6 அரை சதம் உட்பட 576 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தானில் அதிரடி காட்டி வரும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 4 அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் 575 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த வியாழக்கிழமை நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே வெற்றியை தக்க வைக்கும் முனைப்பில் ராஜஸ்தான் களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு குறையிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
RR vs RCB Highlights: பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான்; 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி
டூபிளசிஸ், மேக்ஸ்வெல் அதிரடியால் 171 ரன்கள் சேர்த்த பெங்களூரு; 59 ரன்களுக்குள் சுருண்ட ராஜஸ்தான்; 112 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.