IPL 2023: Schedule, venues to live streaming details Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31-ந் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகள் சொந்த மைதானத்திலும், மற்ற போட்டிகளை வெளியிலும் விளையாட உள்ளன. இத்தொடருக்கான போட்டிகள் அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் நடைபெற உள்ளன
ஐ.பி.எல் 2023-ம் ஆண்டுக்கான அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி,'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
தனது முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி), அதை தக்க வைக்க இந்த சீசனில் முயலும். எனினும், கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐபிஎல் 2023 தொடர்பான சில முக்கிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் 2023 தொடங்கும் தேதி என்ன?
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடர் தொடங்குகிறது.
ஐபிஎல் 2023 -ன் முழு அட்டவணையை எங்கே பார்க்கலாம்?
இந்தியன் பிரீமியர் லீக் 2023-ன் முழு அட்டவணையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும். ஐபிஎல் 2023 போட்டிகள் அட்டவணை: முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ்மோதல்
ஐபிஎல் 2023 நடைபெறும் இடங்கள் எவை?
- நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்.
- பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி.
- பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ.
- ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்.
- எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு.
- எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை.
- அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி.
- பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி.
- ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.
- வான்கடே ஸ்டேடியம், மும்பை.
- சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்.
- இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மஷாலா.
இந்த ஆண்டு பதிப்பில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?
கடந்த ஆண்டைப் போலவே இதே ஆண்டும் 10 அணிகள் ஐபிஎல் 2023ல் இடம்பெறும். சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஐபிஎல் 2023-ன் வடிவம் என்ன?
போட்டி இந்த ஆண்டு சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானம் வடிவத்திற்குத் திரும்பும். ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் 7 போட்டிகளிலும், லீக் கட்டத்தில் 7 ஆட்டங்களில் விளையாடுவார்கள். பிளேஆஃப்களின் அமைப்பு இரண்டு தகுதிச் சுற்றுகள், ஒரு எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டியுடன் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஐபிஎல் 2023 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
ஐபிஎல் 2023 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ஐபிஎல் 2023 போட்டிகளின் ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?
ஐபிஎல் 2023 போட்டிகளை ஆன்லைனில் ஜியோ சினிமா (JioCinema) நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஐபிஎல் 2023 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எங்கே முன்பதிவு செய்வது?
ஐபிஎல் 2023 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை Paytm Insider மற்றும் BookMyShow ஆப்ஸில் முன்பதிவு செய்யலாம்.
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மே 28 அன்று நடைபெறும். பிளேஆஃப்களுக்கான அட்டவணை மற்றும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
காலை மற்றும் மாலை போட்டிகளின் இந்திய (IST) நேரங்கள் என்ன?
இந்திய நேரப்படி பகல் ஆட்டங்கள் பிற்பகல் 3:30 மணிக்கும், மாலை நேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.