IPL 2023, play-offs prediction Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31ம் தேதி) முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் களமாடும் இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே-ஆஃப்க்கு முன்னேறும் என்று டி & பி அட்வைஸரி நிறுவனம் கணித்துள்ளது. சுவாரஸ்யமாக, ரிஷப் பண்ட் இல்லாத டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ ஆகிய அணிகள் பிளே-ஆஃப்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள அணிகளாக தேர்வு செய்துள்ளது.
நடப்பு தொடரில் அகமதாபாத்தில் அரங்கேறும் ஐ.பி.எல் 2023-ன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. கடந்த சீசனில் அறிமுகமாக அணிகளாக களமாடிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தி இருந்தன. அதேநேரத்தில், குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை வாகை சூடி வரலாறு படைத்தது. தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக வலம் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், கடந்த சீசனில் கடைசி 2 இடங்களை பிடித்தன.
ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டை வழக்கமாகக் கொண்டு வரும் டி & பி அட்வைசரி நிறுவனம், இப்போது பிளே-ஆஃப்களில் விளையாடும் நான்கு அணிகளைக் கணிக்க 'மான்டே கார்லோ' சிமுலேஷனைப் பயன்படுத்தி ஒரு கணிப்பைக் கொண்டு வந்துள்ளது. “இந்தியன் பிரீமியர் லீக்கின் வரவிருக்கும் 2023 சீசனின் லீக் கட்டத்தின் 'டாப் ஃபோரை' கணிக்க, நாங்கள் நிதித் துறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் புள்ளிவிவர நுட்பமான 'மான்டே கார்லோ' சிமுலேஷனை நம்பியுள்ளோம். அதை விளையாட்டு வணிகத்திலும் சமமாக நன்றாகவேப் பயன்படுத்தலாம். சிக்கலான வழித்தோன்றல்களை நாங்கள் மதிப்பிடுகிறோம். அதற்காக மில்லியன் கணக்கான எதிர்கால விளைவுகளை உருவகப்படுத்துவதன் மூலம் வழித்தோன்றலின் நியாயமான மதிப்பை மதிப்பிடுகிறோம். கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்ற பல வழித்தோன்றல்களை நாங்கள் மதிப்பிட்டுள்ளோம், மேலும் அந்த அனுபவத்தையும் திறமையையும் நாம் அனைவரும் விரும்பும் - ஐபிஎல்லில் பயன்படுத்த நினைத்தோம்,” என்று டி & பி அட்வைசரி நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரரான என். சந்தோஷ் கூறியுள்ளார்.
16வது சீசனில் அடியெடுத்து வைக்கும் ஐ.பி.எல் டி20 தொடர் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும், ஏனெனில், இதுவரை விளையாடப்பட்ட 950 போட்டிகளில் 564 போட்டிகள் கடைசி ஓவரில் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 350 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 100 போட்டிகளில் தோல்வி கண்ட அணிகளின் ரன்கள் 10 அல்லது அதற்கும் குறைவாக இருந்துள்ளது. மேலும் கடைசி 35 பந்தில் போட்டிகள் முடிவைக் கண்டுள்ளன.
இந்த விஷயங்களைக் கொண்டு, ஒரு முடிவைக் கணிப்பது இன்னும் சவாலானதாக இருக்கலாம், மேலும் டி & பி அட்வைசரி நிறுவனம் சிமுலேட்டரில் அதைப் பயன்படுத்த பல்வேறு தரவுகளை நம்பியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, பரிசீலிக்கப்பட்ட காரணிகளில் ஒவ்வொரு அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வலிமை, அதன் அணி, ஹோம் கிரவுண்ட் நன்மை, நெட் ரன்ரேட் விகிதம், கடந்தகால ஒட்டுமொத்த சாதனை, தற்போதைய வேகம் மற்றும் பிற தொடர்புடைய அளவீடுகள் ஆகியவை அடங்கும்.
இந்த பண்புகளின் செயல்திறன், விநியோகம் மற்றும் மாறுபாடு ஆகியவற்றை தீர்மானிக்க, நிறுவனத்தின் குழு, ஐபிஎல் வரலாற்று தரவை பகுப்பாய்வு செய்து, ஆயிரக்கணக்கான எதிர்கால சூழ்நிலைகளை உருவாக்க சீரற்ற மாதிரியைப் பயன்படுத்தியது என்று அறிக்கை கூறுகிறது. உருவகப்படுத்துதல் மாதிரியில் சார்புநிலையை அறிமுகப்படுத்தக்கூடிய சாத்தியமான வெளிப்புறங்களை அகற்ற கடந்த தரவுகள் ஆராயப்பட்டன என்றும் டி & பி அட்வைஸரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.