Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஐ.பி.எல்-ல் அடித்து நொறுக்கும் ரஹானே உள்ளே… யார் யார் வெளியே?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ள நிலையில், ஐ.பி.எல்-ல் அதிரடியாக விளையாடி வரும் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
Apr 25, 2023 12:46 IST
IPL 2023 success, Ajinkya Rahane added to WTC final 2023 squad Tamil News

Ajinkya Rahane has been included in India’s squad for World Test Championship (WTC) final to be played against Australia from June 7 to 11 at Kennington Oval Stadium in London.

Ajinkya Rahane  - WTC final 2023 squad Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி ‘ரிசர்வ் டே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Advertisment

ஐ.பி.எல்-ல் அடித்து நொறுக்கும் ரஹானே உள்ளே

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ள நிலையில், அந்த அணியில் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய மண்ணில் நடந்து வரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரஹானே விளையாடி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலிக்கு உடல் நிலை சரியில்லமால் போன காரணத்தால், அவரது இடத்தில் ரஹானே களமாடினர். அந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அவரின் இந்த அதிரடி அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்புகள் கிடைக்க உதவியது.

publive-image

கடந்த ஞாயிற்றுகிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 209 ரன்கள் எடுத்துள்ளார். 18 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 199.04 ஆக உள்ளது. குறைந்தபட்சம் 100 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ட்ரைக் ரேட் அதிகம் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் (199.04) ரஹானே முதலிடத்தில் உள்ளார்.

ரஹானே அனுபவம் கொண்ட மிடில் ஆர்டர் வீரராக இருப்பது மட்டுமல்லாமல், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு தனது முதல் சுற்றுப்பயணங்களில் சதம் அடித்த வீரராகவும், இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார் (தென் ஆப்பிரிக்காவில் சதத்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இழந்தார். ) அவரது 12 டெஸ்ட் சதங்களில் எட்டு இந்தியாவிலிருந்து வந்துள்ளன. இது அவர் எவ்வளவு விரைவாக தன்னை நிலைமைகளுக்கு மாற்றியமைக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

யார், யார் வெளியே?

இதற்கிடையில், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், தேர்வுக்குழுவால் கழற்றி விடப்பட்டுள்ளார். ஃபார்மில் இல்லாத கேஎல் ராகுல் அணியில் இடம்பிடித்துள்ளார். அணியில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Sports #India Vs Australia #Indian Cricket #Ipl News #Ipl Cricket #Ipl #World Test Championship #Indian Cricket Team #Ind Vs Aus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment