Advertisment

ஐ.பி.எல் நடத்தை விதிமீறல்; கோலிக்கு அபராதம்: காரணம் இதுதானா?

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐ.பி.எல் நடத்தை விதிகளை மீறியதற்காக பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
IPL 2023: Virat Kohli fined for breaching Code of Conduct during RCB vs CSK clash Tamil News

Royal Challengers Bangalore batter Virat Kohli has been fined 10 percent of his match fees for breaching the IPL Code of Conduct during his team's match against Chennai Super Kings at the M Chinnaswamy Stadium Tamil News

IPL 2023, Royal Challengers Bangalore vs Chennai Super Kings, Virat Kohli Tamil News: 10 அணிகள் களமாடி வரும் 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கிய 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 226 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.

Advertisment

தொடர்ந்து 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

கோலிக்கு அபராதம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ஐ.பி.எல் நடத்தை விதிகளை மீறியதற்காக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

publive-image

சென்னை அணியில் அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அப்போது களத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இதுதான் அபராதம் விதிக்கப்பட காரணம் எனத் தெரிகிறது.

கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் கோலி, 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை இளம் வீரரான ஆகாஷ் சிங் கைப்பற்றி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Virat Kohli Sports Ipl Ipl Cricket Ipl News Csk Vs Rcb Royal Challengers Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment