Advertisment

கடைசி வரிசை பேட்ஸ்மேனாக இறங்கும் தோனி: ஸ்பின்னர்களுக்கு பயமா? ஓடி ரன் சேர்ப்பதில் சிரமமா?

சென்னை அணியின் கேப்டன் தோனி வழக்கம் போல் அணியை திறம்பட நிர்வகித்து வந்தாலும், அவரது பேட்டிங் ரசிகர்கள் முகத்தில் பெரும் கவலையை கொண்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
IPL 2023: Why MS Dhoni not batting up the order for CSK Tamil News

Chennai Super Kings Skipper MS Dhoni batting During CSK vs PBKS clash Tamil News (Photo credit: R. Pugazh Murugan)

MS Dhoni - Chennai Super Kings Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடருக்கான எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி 4ல் தோல்வியுடன் 10 புள்ளிகள் மற்றும் +0.329 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

Advertisment

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக இரண்டு தொடர்ச்சியான தோல்விகள், முதல் நான்கு இடங்களுக்கான நெருக்கமான போராட்டத்தில் சென்னை அணியை மற்ற அணிகளுக்கு இணையாக வைத்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேற அந்த அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் 3ல் கட்டாயமாக வெல்ல வேண்டும்.

கடைசி வரிசையில் களமாடும் தோனி

publive-image



Chennai Super Kings Skipper MS Dhoni batting During CSK vs PBKS clash

(Photo credit: R. Pugazh Murugan)

சென்னை அணியின் கேப்டன் தோனி வழக்கம் போல் அணியை திறம்பட நிர்வகித்து வந்தாலும் அவரது பேட்டிங் ரசிகர்கள் முகத்தில் பெரும் கவலையை கொண்டு வருகிறது. மேலும், தோனி ஏன் இன்னும் லோ-ஆடரில் பேட்டிங் செய்கிறார்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை அணியின் முந்தைய இரண்டு தோல்விகளின் போது, ​​சென்னை அணி அவர்களின் இன்னிங்ஸின் முக்கியமான தருணங்களில் அவரது ஆட்டத்தை தவற விட்டது. இந்த 2 போட்டிகளிலும் மொத்தமாகவே அவர் 4 பந்துகளை மட்டுமே அடித்துள்ளார்.

குழப்பமான விஷயம் என்னவென்றால், 'கேப்டன் கூல்' தோனி ஃபார்மிற்காக போராடவில்லை. இருப்பினும் அவர் டாப் ஆர்டரில் சென்ற ஆட தயங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கூட ஜடேஜாவுக்குப் பிறகு அவர் களமிறங்கினார். அந்த ஆட்டத்தில் நான்கு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை தோனி பறக்கவிட்டு அணி 200 ரன்களைக் கடக்க உதவினார்.

publive-image




Chennai Super Kings Skipper MS Dhoni batting During CSK vs PBKS clash

(Photo credit: R. Pugazh Murugan)

அம்பதி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்களை தோனி எப்படியான தருணத்திலும் அவருக்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்புகிறார். ஆனால், அவர்களின் பேட்டிங் இதுவரை மெச்சும் படியாதனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் மீது தோனி தனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்து வருகிறார்.

இந்த நகர்வுக்குப் பின்னணியில் இரண்டு காரணங்கள் உள்ளதாக தெரிகிறது. "முதலாவதாக தோனி தனது முழங்கால் காயத்தின் வலியுடன் விளையாடி வருகிறார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது கடினம். ஏனென்றால் அவர் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓட வேண்டும். அதேபோல் தோனி விக்கெட் கீப்பராகவும் செயல்பட வேண்டும். அது சற்று கடினமாக இருக்கலாம். 41 வயதில், உடல் தேய்மானம் மற்றும் தசை கிழிவு போன்ற காரணிகளும் ஒரு பகுதியாக உள்ளன. குறிப்பாக காயத்தால் உடலில் இத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்துவது எளிதானது அல்ல.

publive-image




Chennai Super Kings Skipper MS Dhoni batting During CSK vs PBKS clash

(Photo credit: R. Pugazh Murugan)

இரண்டாவது காரணம், தோனி, சர்வதேச ஓய்வுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது , பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்தி பவுண்டரி, சிக்ஸரை பறக்கவிட சிறப்பாகத் தயாராக இருப்பதாக உணர்கிறார். சுழற்பந்து , குறிப்பாக மணிக்கட்டு-சுழல், அவரை சிறிது தொந்தரவு செய்து வருகிறது. அதனால், அவர் ஸ்ட்ரைக்கை சுழற்ற முடியாத சந்தர்ப்பங்களும் நிகழ்கின்றன.

எனவே, ஆழமான பேட்டிங் வரிசை மற்றும் ஷிவம் துபே போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்கும் பேட்ஸ்மேன் இருப்பதால், தோனி வரிசையில் கீழே பேட்டிங் செய்ய வசதியாக உணர்கிறார். ஐபிஎல்-க்கு முந்தைய அவரது பயிற்சியின் போது, ஒரு சில பந்துகளை விளையாடி சிக்ஸர் அடிப்பதை மையமாகக் கொண்டது. மேலும் அவரது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், அவரை விட பந்துவீச்சில் ஜடேஜா சிறந்த பந்தயம் என்று தோனி நம்புகிறார்.

அவர் தான் அவரது உடலின் சிறந்த நீதிபதி. என்ன செய்ய வேண்டும், அணியின் காரணத்திற்காக தன்னை மேம்படுத்துவது முக்கியம் என்று அவர் கருதினால், கடைசி சில ஆட்டங்களில் அவர் அதைச் செய்யலாம்." என்று விஷயம் அறிந்த கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

publive-image




Chennai Super Kings Skipper MS Dhoni batting During CSK vs PBKS clash

(Photo credit: R. Pugazh Murugan)

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment