டோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார்.
நடப்பு சீசனில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட இவரது தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெறவில்லை.
இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.
தீபக் சாஹரும் காயம் காரணமாக அணிக்கு திரும்பாததும் சிஎஸ்கேவுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைத்துள்ளார்.
சிஎஸ்கே முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனி, தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் என்ன? என்று யோசனையை முன்வைத்துள்ளார்.
7ஆவது வீரராக தற்போது அவர் களம் இறங்குகிறார். அதிகபட்சமாக 10 முதல் 15 பந்துகள் வரை மட்டுமே அவர் விளையாடுகிறார்.
தனது ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையில் தொடக்க ஆட்டக்காரராகவே தோனி களம் இறங்கினார். அதேபோல் இப்போதும் அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாடலாம்.
அல்லது 3ஆவது 4ஆவது வரிசையில் கூட அவர் களம் இறங்கலாம். அவர் 14 முதல் 15 ஓவர்கள் வரை களத்தில் இருந்தால், அணியின் ஸ்கோர் நிச்சயமாக அதிகரிக்கும். ஆட்டத்தின் போக்கும் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்திய அணிக்கு கடினமான நேரத்தில் அவர் அதிக ஸ்கோரை பதிவு செய்து அசத்தியிருக்கிறார் என்றார் பார்த்திவ் படேல்.
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக ஆக்கியிருக்கணும்… ஜடேஜா கேப்டன்சி குறித்து சாஸ்திரி கேள்வி
சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டோனி, டி20 கிரிக்கெட்டில் இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை. உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் கூட அவர் இதுவரை ஓபனராக களம் புகுந்ததில்லை.
17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு விளையாடி இருக்கிறார். இலங்கைக்கு எதிராக 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 பந்துகளில் 2 ரன்களையும், 2006இல் இங்கிலாந்துக்கு எதிரான 96 பந்துகளில் 106 ரன்களையும் எடுத்து இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை டோனி, சிஎஸ்கே அணிக்காக 3ஆவது வரிசையில் களம் இறங்கி விளையாடியிருக்கிறார். கடைசியாக அந்த வரிசையில் அவர் 2011 இல் விளையாடினார்.
7 முறை அவர் இதுபோல் விளையாடி 188 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு அரை சதமும் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil