IPL Cricket Ashwin Tamil Conversion To Samson About Pant : கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர்கள் விளையாடும்போது முக்கிய தருணங்களில் தங்களது தாய் மொழியான தமிழில் பேசிக்கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. பேட்டிங் செய்யும் வீரருக்கு தமிழ் தெரியாது என்பதால், அவருக்கு எதிரான யுக்தியை திட்டமிடுவதற்கு இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும குறிப்பாக தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், உள்ளிட்ட தமிழக வீரர்கள் அவ்வப்போது களத்தில் தமிழில் பேசும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் தமிழில் பேசியுள்ளார். சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழ் நன்கு அறிந்தவர்.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லி ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் மற்றும் படிக்கல் இருவரும் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் கடந்த 54 ரன்கள் குவித்த படிக்கல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் அதிரடியாக ஆட மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் இந்த தொடரில் 3-வது சதத்தை பதிவு செய்தார். மேலும் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம் கடந்துள்ளார். இறுதியில் பட்லர் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் ஆனாலும் இறுதிகட்டத்தில் டெல்லி அணியின் ரோவன் பாவல் அதிரடியாக ஆடினாலும் அந்த அணி வெற்றி பெற முடியாவில்லை. இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து.
இந்த போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங்கின்போது 6-வது ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் முதல் பந்தில் ஷர்பாரஸ் கான் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்காக வியூகம் அமைத்த அஸ்வின், விக்கெட் கீப்பர் சாம்சனிடம் தமிழில் பேசினார்.
இதில் இறங்கிய உடனே இந்த பக்கம் அந்த பக்கம் பார்த்துக்கோ, முதல் பால்லே கூட அப்படி பண்ணுவான் என்று அஸ்வின் சொல்வது ஸ்டெம்ப் அருகில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தெரியாத பேட்ஸ்மேன்களளை வீழ்த்துவதற்காக கையாளப்படும் இந்த யுக்தி பலமுறை கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil