scorecardresearch

ஐ.பி.எல்-ல் ரோகித் சர்மா இதுவரை குவித்த தொகை மட்டும் ரூ178 கோடி: டாப் 5 வீரர்களில் 3 பேர் சி.எஸ்.கே

பல ஆண்டுகளாக ஐ.பி.எல் அணிகளுக்காக விளையாடி வரும் சில இந்திய வீரர்கள் இப்போது ஏராளமான பணத்தை சம்பாதித்துள்ளனர்.

IPL: Top 5 India cricketers earned the most from cash-rich league TAMIL NEWS
Top 5 India cricketers earned the most in IPL Tamil News

IPL: Top 5 India cricketers earned the most TAMIL NEWS: 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், இளம் வீரர்களான சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். சாம் கர்ரனை ரூ.18.5 கோடிக்கு வாங்கி இருந்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது பல திறமையான வீரர்கள் கோடிகளை குவித்துள்ளனர். இதில், வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து, பல உள்ளூர் வீரர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக ஐ.பி.எல் அணிகளுக்காக விளையாடி வரும் சில இந்திய வீரர்கள் இப்போது ஏராளமான பணத்தை சம்பாதித்துள்ளனர். அவ்வகையில், இந்தத் தொடரில் அதிக வருமானம் ஈட்டும் 5 இந்திய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

  1. ரவீந்திர ஜடேஜா – ரூ.109 கோடி

ரவீந்திர ஜடேஜா தனது ஐபிஎல் வாழ்க்கையை 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸுடன் (RR) தொடங்கினார். ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2008ல் அவரது செயல்திறனைக் கண்டு, அந்த அணி அவரை 12 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. இரண்டு ஆண்டுகள் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஜடேஜா, அதன்பிறகு, வீரர்களின் வழிகாட்டுதல்களை மீறியதால் லீக்கின் 3வது சீசனில் இருந்து அவர் தடை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தெரிவிக்காமல் மற்ற அணிகளிடமிருந்து ஒப்பந்தத்தைப் பெற முயன்றார்.

பின்னர் 2011ல், ஐ.பி.எல் தொடருக்கு திரும்பிய அவரை கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (KTK) அவரை 4.37 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், ஒரு வருடம் கழித்து, ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) KTK நிறுத்தப்பட்டதால் அவர் மீண்டும் ஏலத்தில் கலந்து கொண்டார். இந்த முறை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அவரை 12.8 கோடி ரூபாய்க்கு வாங்கியதால், அவர் சீசனின் விலையுயர்ந்த வீரர் ஆனார்.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், ஜடேஜா குஜராத் லயன்ஸ் (ஜிஎல்) அணிக்காக விளையாடினார். ஏனென்றால், மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே அணிக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. குஜராத் லயன்ஸ் அணிக்காக முதல் சீசனில் விளையாடிய அவர் 5.5 கோடி பெற்றார், அடுத்த சீசனில் 9.5 கோடி பெற்றார். 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அவர் விளையாடி வருகிறார். மேலும் அவரது தற்போதைய சம்பளம் 16 கோடி ரூபாய் ஆகும்.

  1. சுரேஷ் ரெய்னா – ரூ 110 கோடி

சுரேஷ் ரெய்னா லீக்கின் 15வது சீசனைத் தவறவிட்ட பிறகு, செப்டம்பர் 2022ல் ஐ.பி.எல்-லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அவரை அப்போது ஐபிஎல் ஏலத்தில் ரூ 2.6 கோடிக்கு சென்னை அணி எடுத்தது. 2010ல் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது போது அவர் முக்கிய வீரராக இருந்தார். இது அவருக்கான மார்க்கெட்டையும் கொண்டு வந்தது.

அவரை கேப்டன் தோனி, ஆல்பி மோர்கல் மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டது. 2011-13 பதிப்புகளுக்கான அவரது சம்பளத்தை 2.6 ரூபாயில் இருந்து 5.9 கோடி ரூபாயாக சென்னை அணி உயர்த்தியது. 2014 இல், உரிமையானது அவரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது, அவரை 9.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

சிஎஸ்கே இல்லாத நிலையில், அவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக (ஜிஎல்) 2 ஆண்டுகள் விளையாடினார். அவரது தலைமைத்துவ திறமையை நம்பி, குஜராத் லயன்ஸ் (ஜிஎல்) அணி நிர்வாகம் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.9.5 கோடி மற்றும் 12.5 கோடிகளை கொடுத்தது. அதன்பிறகு, மீண்டும் சென்னை அணியில் 2018ல் 11 கோடி ரூபாய்க்கு மீண்டும் சேர்ந்தார் ரெய்னா. ஆனால், 2021-க்குப் பிறகு அவரை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. அதனால், அவர் தனது ஓய்வை அறிவித்தார்.

  1. விராட் கோலி – ரூ. 173 கோடி

இந்திய இளம் நட்சத்திரமாக ஜொலித்த விராட் கோலியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2008 ஆம் ஆண்டு ரூ.12 லட்சத்திற்கு எடுத்தது. 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவரது அற்புதமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் செயல்திறன் அவருக்கு ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தது.

2011 மெகா ஏலத்திற்கு முன், கோலி உரிமையாளரால் தக்கவைக்கப்பட்ட ஒரே வீரர் ஆனார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான ஆட்டம் ஆர்.சி.பி நிர்வாகத்தின் கண்களைக் கவர்ந்தது. அவரிடம் ஒரு தீப்பொறியைக் கண்டறிந்து, அணி நிர்வாகமும் அவருக்கு ஊதியத்தை உயர்த்தியது. இந்த முறை அவரது சம்பளம் 8.3 கோடி ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது.

2013ல் அவருக்கு கேப்டன் பொறுப்பையும் வழங்கியது. அடுத்த ஆண்டு, மீண்டும் அவரது சம்பளம் 8.3 கோடியிலிருந்து 12.5 கோடியாக உயர்ந்தது. 2018 முதல் 2021 வரை, அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.17 கோடி ஆகும். ஆனால் 2022 முதல், ஐபிஎல் சம்பள வரம்பு விதிகளைப் பின்பற்றி, அணி நிர்வாகம் ஊதியத்தைக் கழித்ததால், அவருக்கு ஆண்டுக்கு ரூ15 கோடி மட்டுமே வழங்கப்படுகிறது.

  1. எம்.எஸ் தோனி – ரூ. 176 கோடி

எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 2008ல், அவரை 6 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இந்தத் தொகையுடன், முதல் ஐபிஎல் பதிப்பில் அதிக சம்பளம் வாங்கிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2010 இல், அவர் தனது அணிக்காக மதிப்புமிக்க ஐபிஎல் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை உயர்த்தினார். அணியின் இந்த அபாரமான செயல்களை கண்டு, 2011-ம் ஆண்டுக்கு அவரை அணி நிர்வாகம் தக்கவைத்தது. தக்கவைப்புடன், அவருக்கு சம்பள உயர்வும் கிடைத்தது. இந்த முறை, அவரது சம்பளம் ஆண்டுக்கு 8.3 கோடி ரூபாய் ஆக இருந்தது.

2014 முதல் 2017 வரை, அவர் சிஎஸ்கே (2014-15) மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (ஆர்.பி.எஸ்ஜி) ஆகிய இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் இந்த காலகட்டத்தில், அவர் ஒவ்வொரு ஆண்டும் 12.5 கோடி பெற்றார். சிஎஸ்கே தனது இரண்டு ஆண்டு இடைநீக்கத்திற்குப் பிறகு 2018ல் திரும்பியது.

சென்னை அணியின் மறுபிரவேசத்துடன், எம்எஸ் தோனியின் சம்பளம் 12.5 கோடி ரூபாயில் இருந்து 15 கோடி ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், 2022 ஐபிஎல்-க்கு முன்னர் ஊதியக் குறைப்பைப் பெறுவதில் இருந்து அவர் பின்வாங்காததால், அவரது தற்போதைய சம்பளம் 12 கோடி ரூபாய் ஆக உள்ளது.

  1. ரோகித் சர்மா – ரூ.178 கோடி

ஐ.பி.எல் லீக் வரலாற்றில் ரோகித் ஷர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார். அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ரோகித் கடந்த 2011ல் மும்பை அணியில் இணைந்தார். அவரை ஐபிஎல் ஏலத்தில் 9.2 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

முன்னதாக, 2008 முதல் 2010 வரை, அவர் டெக்கான் சார்ஜர்ஸ் (டிசி)க்காக ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளத்தில் விளையாடினார். 2013ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அவர் ஆண்டுக்கு 12.5 கோடி ரூபாய்க்கு மும்பை அணியால் தக்கவைக்கப்பட்டார். 2017ல், அவர் மீண்டும் போட்டியில் தனது திறமையை நிரூபித்தார், தனது அணிக்காக மூன்றாவது பட்டத்தை வென்றார்.

அவரது அற்புதமான கேப்டன்சியைத் தொடர்ந்து, மும்பை அணி 2018 பதிப்பிற்கு பிறகு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வழங்கியது. 2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, மும்பை அவரை ஆண்டுக்கு 16 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது . இந்த மிகப்பெரிய தொகையுடன், லீக்கில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித் முதன்மையானவராக உள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl top 5 india cricketers earned the most from cash rich league tamil news