scorecardresearch

KKR vs RR Highlights: ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அதிரடி… ராஜஸ்தான் அபார வெற்றி

வெங்கடேஷ் ஐயர் அரைசதம் மூலம் 149 ரன்கள் சேர்த்த கொல்கத்தா; பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

KKR vs RR Live Score | Kolkata vs Rajasthan Live Score | IPL 2023 Score
ஐபிஎல் 2023, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர்

Kolkata Knight Riders vs Rajasthan Royals IPL 2023 Score Updates in tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் ராஜ்ஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

Indian Premier League, 2023Eden Gardens, Kolkata   31 May 2023

Kolkata Knight Riders 149/8 (20.0)

vs

Rajasthan Royals   151/1 (13.1)

Match Ended ( Day – Match 56 ) Rajasthan Royals beat Kolkata Knight Riders by 9 wickets

இன்றைய ஆட்டம் இரு அணிக்குமே முக்கியமானதாகும். இதில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி பெறும் அணியின் வாய்ப்பு கரைந்து போய்விடும். எனவே, அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர்

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் கொல்கத்தாவும், 12 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு; கொல்கத்தா பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யும்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் களம் இறங்கினர். ஜேசன் ராய் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ட்ரெண்ட் போல்ட் பந்தில் ஷிம்ரோன் ஹெமெயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து, வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ட்ரெண்ட் போல்ட் பந்தில் சந்தீப் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 4.1 ஓவரிலேயே கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால், அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணாவும் வெங்கடேஷ் ஐயரும் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்தில் ஹெட்மெயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த, அண்ட்ரே ரஸ்ஸலும் வந்த வேகத்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து கே.எம். ஆசிஃப் பந்தில் அஸ்வின்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதே நேரத்தில், மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர் யுஸ்வேந்திர சாஹல் பந்தில் ட்ரெண்ட் போல்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இவரையடுத்து, ஷர்துல் தாக்கூர் 1 ரன் மட்டுமே எடுத்து யுஸ்வேந்திர சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதே போல, ரிங்கு சிங் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் பந்தில் ஜோ ரூட் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியில், 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில், அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் சந்தீப் சர்மா, கே.எம். ஆசிஃப் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் பேட்டிங் செய்தனர். ஜாஸ் பட்லர் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மூலம் ரன் அவுட் செய்து வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்த, சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக விளையாடி வான வேடிக்கை நிகழ்த்தினர்.

ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் 1 விக்கெட் மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஜெய்ஸ்வால் 5 சிக்ஸ் 12 ஃபோர் உள்பட 97 ரன்களுடனும் சஞ்சு சாம்சன் 5 சிக்ஸ், 2 ஃபோர் உள்பட 48 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Kkr vs rr live cricket score kolkata knight riders vs rajasthan royals ipl 2023 56th match updates in tamil