ஐ.பி.எல். போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் டைடன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக விஜய் சங்கர் அவுட் ஆகாமல் 24 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அதேபோல் சாய் சுதர்சனும் 38 பந்துகளில் அரை சதம் (53) குவித்து அவுட் ஆனார்.
ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது போல் ஆடிய சுப்மன் கில் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் ஒரளவு ரன் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ரன்கள் குவித்தது.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா முதலில் சற்று திணறியது. எனினும் வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ரிங்கு சிங்கும் 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராணா 45 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து திரில் வெற்றியை தனதாக்கியது. குஜராத் அணி தரப்பில் ராஷித் கான் 3 விக்கெட்டும், ஜோசப் 2 விக்கெட்டும், சமி, லிட்டில் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.
இந்தப் போட்டியில், கடைசி ஓவரில் 5 சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த நிலையில் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் ரிங்கு சிங். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“