Kolkata Knight Riders vs Gujarat Titans : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 39ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
கொல்கத்தா அணி தரப்பில் ஜெகதீசன், ரகமனதுல்லா ஓபனர்களாக களம் கண்டனர். 19 ரன்னில் சமி ஓவரில் எல்பிடபிள்யூ என்ற முறையில் விக்கெட்-ஐ ஜெகதீசன் பறிகொடுத்த நிலையில் ரகமனதுல்லா அதிரடி ஆட்டம் காட்டினார்.
அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ரகமனதுல்லா, வெங்கடேஷ் ஐயர் களத்தில் உள்ளனர். 27 பந்துகளில் ரகமனதுல்லா 51 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும்.
180 ரன்கள் டார்கெட்
தொடர்ந்து அபாரமாக ஆடிய ரகமனதுல்லா 39 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதையடுத்து ரூசெல் (34) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். இதையடுத்து, 20 ஓவரின் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
குஜராத் வெற்றி
அடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர் சகா 10 ரன்னில் நடையை கட்டினார். கில் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்துள்ளார்.
சிறப்பாக ஆடிய கில் 49 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா (26) ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து, விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் இணை குஜராத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது.
குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. விஜய் சங்கர் 51 ரன்னிலும், டேவிட் மில்லர் 32 ரன்னிலும் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றனர்.
அணி வீரர்கள் விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஜெகதீசன், ரகமனதுல்லா, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரசெல், நரேன், டேவிட் விசே, ஷர்துல் தாகூர், ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி
குஜராத் டைடன்ஸ்
விருத்திமான் சகா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல், ராஷித் கான், நூர் அஹமது, முகம்மது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“