Advertisment

KKR vs SRH IPL 2023 Highlights: ரின்கு சிங், ராணா போராட்டம் வீண் : ஐதரபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
kolkata knight riders vs sunrisers hyderabad ipl 2023 match today kkr vs srh scorecard updates in tamil

KKR vs SRH IPL 2023 Live Score: Kolkata Knight Riders are hosting Sunrisers today at Eden Gardens.

IPL 2023 Live Score, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad in tamil:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.

Advertisment

டாஸ் வென்ற கொல்கத்தா

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சன்ரைசஸ் ஐதரபாத் அணியின் இன்னிங்சை ஹேரி புரூக் - மயங்க் அகர்வால் தொடங்கினர். இதில் தொடக்கம் முதலே ஹேரி புரூக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபுறம் மயங்க் அகர்வால், 9 ராகுல் திரிபாதி 9 ரன்களுடன் ஒரே ஓவரில் வெளியேறினர். ரஸல் வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தில் அகர்வால், கடைசி பந்தில் திரிபாதி வெளியேற்றி இரட்டை செக் வைத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் எய்டன் மார்க்ரம் ஹேரி புரூக்குடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில், 26 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 50 ரன்கள் கடந்த மார்க்ரம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா தனது பங்குக்கு 17 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனது அதிரடியில் இருந்து பின்வாங்காத ஹேரி புரூக் சதமடித்து அசத்தினார். 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சதம் இதுவாகும். இறுதிக்கட்த்தில் கலாசன் 6 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 16 ரன்களும், புரூக் 55 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 100 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகளும், சக்ரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 229 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக முகமதுல்ல குர்பாஸ் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 10 ரன்களுக்கும்,  நரேன் தான் சந்தித்த முதல் பந்திலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த நிலையில், சிறப்பாக விளையாடிய ஜகதீசன், 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் கேப்டனுக்கே உரிய முக்கியத்துவத்துடன் விளையாடிய நித்தீஷ் ராணா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் உம்ரான் மாலிக் வீசிய 6-வது ஓவரில் 4 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ராணா, 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 41 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 75 ரன்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் ரின்கு சிங் இருவரும் வெற்றிக்காக போராடினர். இதில் கடந்த போட்டியில் தொடர்ந்து 5 சிக்சர் விளாசிய ரின்கு சிங் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இதனால் கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷர்தல் தாகூர் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த 5 பந்துகளில் ஒரு சிக்சருடன் 8 ரன்கள் மட்டுமே கிடைத்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியை சந்தித்தது.

ரிங்கு சிங் 31 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில், ஜென்சன், மார்கண்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மாலிக், நடராஜ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Live Cricket Score Ipl Cricket Ipl News Ipl Live Score Sunrisers Hyderabad Kolkata Knight Riders
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment