LSG vs DC Live Score, IPL 2023 Tamil News: 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்கி= நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 3வது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
ICC Cricket World Cup Qualifiers Playoff, 2023Wanderers Cricket Ground, Windhoek 08 June 2023
Papua New Guinea 118 (34.4)
USA 235/7 (50.0)
Match Ended ( Day – Match 10 ) USA beat Papua New Guinea by 117 runs
கடந்த சீசனில் அறிமுக தொடரிலேயே 4-வது இடத்தை பிடித்து கவனத்தை ஈர்த்த லக்னோ அணி, டெல்லிக்கு எதிரான 2 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. கேப்டன் ராகுல், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜெய்தேவ் உனட்கட், ரொமாரியா ஷெப்பர்டு லக்னோ அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தால் ஆடாத நிலையில் மூத்த வீரர் வார்னர் வழிநடத்த உள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியில் மிரட்டிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, சர்ப்ராஸ் கான், ரோமன் பவெல் என்று டெல்லி அணியில் நட்சத்திர வீரர்களுக்கு குறைவில்லை. சர்வதேச போட்டி காரணமாக டெல்லி வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி, நோர்டியா, முஸ்தாபிஜூர் ரகுமான் இன்றைய மோதலில் ஆடமாட்டார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி முதலில் களமிற்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கைல் மேயர்ஸ் கேப்டன் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் கைல் மேயர்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். சந்திக்கும் அனைத்து பந்துகளையும் சிக்சரும் பவுண்டரியுமாக விரட்டிய கைல் மேயர்ஸ், அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 38 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த தீபக் ஹோடா 17 ரன்களும், ஸ்டொயினிஸ் 12 ரன்களும், சற்று அதிரடியாக விளையாடி பூரன் 21 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 ரன்களும், இறுதிகட்டத்தில் கலக்கிய ஆயுஷ் பதோனி 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 18 ரன்கள் குவித்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. கிருஷ்ணப்பா கவுதம் 6 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
டெல்லி அணியில் கலீல் அகமது, சக்காரியா ஆகியார் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் குல்தீப் யாதவர் ஆகியார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ப்ரித்வி ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 9 பந்துகளை சந்தித்த 12 ரன்கள் எடுத்திருந்த ப்ரித்வி ஷா மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மார்ஷ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் மார்க் வுட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய சர்ப்ரஸ் கான் 4 ரன்களில் வீழ்ந்தார். இதனால் டெல்லி அணி 48 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பிறகு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் வார்னர், ரோஸவ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி சிக்சர்களாக விளாசிய நிலையில், 20 பந்துகளை சந்தித்த ரோஸவ் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த வார்னர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து வீழ்ந்தார்.
அடுத்து வந்த வீரர்களில் அக்சர் பட்டேல் மட்டும் 16 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மார்க் வுட் 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆவேஷ்கான் மற்றுமு் பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil