IPL 2023,Lucknow Super Giants vs Gujarat Titans Live Score in Tamil: 16-வது ஐ.பி.எல். தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கிய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.
Indian Premier League, 2023Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow 31 May 2023
Lucknow Super Giants 128/7 (20.0)
Gujarat Titans 135/6 (20.0)
Match Ended ( Day – Match 30 ) Gujarat Titans beat Lucknow Super Giants by 7 runs
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணி லக்னோ அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ரன்கள் எடுக்க திணறியது. சும்மான் கில் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்த நிலையில். அபினவ் மனோகர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 10 ரன்களிலும், மில்லர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய விருத்திமான் சஹா 37 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அவ்வப்போது பவுண்டரி விரட்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. திவாட்டிய 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். லக்னோ அணி தரப்பில் குணால் பாண்டியா, ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நவீன் உல ஹக், மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில், கைல் மேயர்ஸ் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், மேயர்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குணால் பாண்டியா 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மந்தமான ஆடி அரைசதம் கடந்த கேப்டன் ராகுல் 61 பந்துகளில் 68 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனாலும் லக்கோ அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து வலுவாக நிலையில் இருந்தது. இதனால் கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
மொகித் சர்மா வீசிய இந்த ஓவரில் முதல் பந்தில், 2 ரன்கள் எடுத்த கேப்டன் ராகுல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 3-வது பந்தில், ஸ்டொயினிஸ் ஆட்டமிழந்த நிலையில், 4-வது பந்தில் பதோனி ரன் அவுட் ஆனார். அடுத்து 5-வது பந்தில் தீபக் ஹூடா ரன் ஆனதால் கடைசி பந்தில் லக்னோ வெற்றிக்கு 8 ரன்கள் தேவைக்கப்பட்டது. ஆனாலும் மொகித் சர்மா அந்த பந்தை டாட் பாலாக வீசியதால் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் என்ற எளிய இலக்ககுடன் களத்தில் இருந்த லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியை தழுவியுள்ளனர். குஜராத் அணி தரப்பில், மொகித் சர்மா நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil