10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை) இரவு 7.30 மணிக்கு நடந்த 15வது ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய கோலி 61 ரன்களும் (4 சிக்ஸர் - 4 பவுண்டரிகள்), கேப்டன் டு பிளெசிஸ் 79 ரன்களும் (5 சிக்ஸர் - 4 பவுண்டரிகள்), மேக்ஸ்வெல் 59 ரன்களும் (6 சிக்ஸர் - 3 பவுண்டரிகள்) எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் அமித் மிஸ்ரா மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் பூஜ்ஜிய ரன்னிலும், தீபக் ஹூடா 9 ரன்னிலும், க்ருனால் பாண்டியா ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடினார். அரைசதம் விளாசி அவர் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு களம் புகுந்த நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் அரைசதம் அடித்து நடப்பு சீசனில் அதிவேக அரைசதம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
பூரான் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களை விளாசி 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு, லக்னோவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் உனத்கட் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் மார்க் வுட் போல்ட்-அவுட் ஆனார். ஸ்ட்ரைக்கில் இருந்த ரவி பிஷ்னோய் 3வது பந்தில் 2 ரன், 4வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 5வது பந்தில் உனத்கட் ஆட்டமிழக்க, லக்னோ வெற்றி பெற கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது.
இந்த தருணத்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த அவேஷ் கான் ஹர்ஷல் படேலின் பந்தை அடிக்க முடியாமல் விட்டார். ஆனாலும், அவரும் ரவி பிஷ்னோயும் ஒரு ரன் எடுத்து, லக்னோவின் வெற்றியை உறுதி செய்தனர். பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற ஆட்டத்தில் லக்னோ ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி த்ரில் வெற்றியை ருசித்தது. அதிரடியாக மட்டையைச் சுழற்றிய பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
A match to remember for everyone:
1 required in 1 ball with just 1 wicket in hand - bowler tried to run out Bishnoi at non striker's end, but fumbled. pic.twitter.com/ugzI12vTOX— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள்!
லக்னோவிடம் பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி கண்ட நிலையில், அது தொடர்பான மீம்ஸ்களை இணைய வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
ஆர்.சி.பி அதிர்ச்சி தோல்வி இணையத்தை கலக்கும் மீம்ஸ்
ஆர்.சி.பி அதிர்ச்சி தோல்வி இணையத்தை கலக்கும் மீம்ஸ்
ஆர்.சி.பி அதிர்ச்சி தோல்வி இணையத்தை கலக்கும் மீம்ஸ்
ஆர்.சி.பி அதிர்ச்சி தோல்வி இணையத்தை கலக்கும் மீம்ஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.