LSG vs SRH Match IPL 2023 Score Update in Tamil: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 10வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது.
Indian Premier League, 2023Arun Jaitley Stadium, Delhi 03 June 2023
Delhi Capitals 162/8 (20.0)
Gujarat Titans 163/4 (18.1)
Match Ended ( Day – Match 7 ) Gujarat Titans beat Delhi Capitals by 6 wickets
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அன்மோல்ப்ரீத் சிங்குடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இதில் அனுமோல் ப்ரீத் சிங் 26 பந்துகளில் 31 ரன்களும், திரிபாதி 41 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர், அடுத்து வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களும், அப்தல் சமத் 21 ரன்களும் எடுத்து வெளியேறிய நிலையில், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்குடன் பெவிலியன் திரும்பினர். இதனால் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ அணி தரப்பில், க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், தாகூர், பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் மேயர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராகுல் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திபக் ஹூடா ஒரு ரன்னிலும், ஷீப்ஹெர்டு ரன்கணக்கை தொடங்காமலும் வெளியேறினர்.
ஆனாலும் 16 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil