Mumbai Indians (MI) vs Punjab Kings (PBKS) Score Updates in Tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
Indian Premier League, 2023Wankhede Stadium, Mumbai 31 May 2023
Mumbai Indians 201/6 (20.0)
Punjab Kings 214/8 (20.0)
Match Ended ( Day – Match 31 ) Punjab Kings beat Mumbai Indians by 13 runs
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளின் வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெஹ்ரன்டாஃப்
பஞ்சாப் கிங்ஸ்
அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்
பஞ்சாப் பேட்டிங்
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் மற்றும் மேத்யூ ஷார்ட் களமிறங்கினர். மேத்யூ 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதர்வா அதிரடியாக ஆடி ரன்குவித்தார். 2 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி அடித்த பிரப்சிம்ரன் 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த லிங்க்ஸ்டன் 11 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஹர்பிரீத் களமிறங்கினார். அவர் களமிறங்கிய சிறிது நேரத்திலே அதர்வா 29 ரன்களில் அவுட் ஆனார். இந்த நிலையில் பஞ்சாப் அணி 9.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தச் சமயத்தில் ஹர்பிரீத் உடன் சாம் கரண் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். இதனால் ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்திருந்தப்போது, ஹர்பிரீத் 41 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சிக்சர்களாக விளாசினார். இதற்கிடையில் அரைசதம் அடித்த சாம் கரண் 55 ரன்களில் அவுட் ஆனார். அவர் 4 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து ஷாரூக் கான் களமிறங்கிய நிலையில் ஜிதேஷ் அவுட் ஆனார். அவர் 7 பந்தில் 4 சிக்சர்களுடன் 25 ரன் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய பிரார் 5 ரன்களில் அவுட் ஆக பஞ்சாப் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் கிரீன், சாவ்லா தலா 2 விக்கெட்களையும், அர்ஜூன், பெகண்ட்ராஃப், ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷான் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து கிரீன் களமிறங்கினார். ரோகித் மற்றும் கிரீன் பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தநிலையில் ரோகித் சர்மா 44 ரன்களில் அவுட் ஆனார். 27 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து வந்த சூர்யகுமார் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தார். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். இதற்கிடையில் கிரீன் அரைசதம் அடித்தார். மும்பை அணியின் எண்ணிக்கை 159 ஆக இருந்தப்போது கிரீன் அவுட் ஆனார். அவர் 3 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக டிம் டேவிட் களமிறங்கி சிக்சர் விளாசினார். இதற்கிடையில் அரைசதம் அடித்த சூர்யகுமார் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்ததாக திலக் வர்மா களமிறங்கினார். டிம் டேவிட் 2 சிக்சர்கள் அடித்து விரைவாக ரன் சேர்க்க, மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் டிம் டேவிட் 1 ரன் சேர்த்தார். அடுத்த பந்தைச் சந்தித்த திலக் வர்மாவால் ரன் எடுக்க முடியவில்லை. 3 ஆவது பந்தில் திலக் வர்மா போல்டானார். அடுத்து களமிறங்கிய வதேரா முதல் பந்திலே போல்டாகி வெளியேறினார். இதனால் கடைசி 2 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து களமிறங்கிய ஆர்ச்சர் 5 ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்க மும்பை அணி தோல்வியை தழுவியது. கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் 4 விக்கெட்களை வீழ்த்தினார். எல்லிஸ் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil