Mumbai Indians vs Sunrisers Hyderabad Match Update : ஐ.பி.எல் தொடர்களில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே இந்த தொடரின் 69-வது லீக் போட்டி இன்று (மே 21) ஞாயிற்றுக்கிழமை மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மும்பை வாங்கடே மைதானத்தில் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் சேனலில் நேரடி ஒளிபரப்பாகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசி வாய்ப்பு மீதமுள்ளது. அதனால், இந்த சீசனில் இதுவரை வான்கடே ஸ்டேடியத்தில் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக விளையாட உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் லீக் சுற்றில் 14 புள்ளிகள் மற்றும் 0.148 அதிகபட்ச ரன் ரேட் போல் இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக விளையாடி 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடியும். ஆனால், அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்) டிவால்ட் பிரெவிஸ், நேஹல் வதேரா, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, த்ரிஸ்டன் ஸ்டுப்ஸ், கேமரான் கிரீன், ராகவ் கோயல், ஷாம்ஸ் முலானி, டிம் டேவிட், இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்) விஷ்ணு வினோத், ஆகாஷ் மத்வால், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், கிறிஸ் ஜோர்டான், டுயன் ஜேன்சென், ஹ்ரித்திக் ஷோகீன், ஜேசன் பிரெண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ரிலே மெரிடித், சந்தீப் வாரியர் ஆகியோர் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள்:
ஏய்டன் மர்க்ராம் (கேப்டன்), அப்துல் சமத், அன்மோல்பிரீத் சிங், ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ராகுல் திரிபாதி, சமர்த் வியாஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜேன்சென், மயங்க் தாகர், சன்விர் சிங், விவ்ரந்த் சர்மா, கிளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், உபேந்திர யாதவ், அடில் ரஷித், அகீல் ஹோசெய்ன், புவனேஷ்வர் குமார், ஃபசல்லாக் ஃபரூக்கி, கார்திக் தியாகி, மயங்க் மார்கண்டே, டி. நடராஜன், உம்ரான் மாலிக், ஆகியோர் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டாஸ்வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர்களாக, விவ்ரந்த் சர்மா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள்.
ஹைதராபாத் ரன் குவிப்பு
சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்த நிலையில், 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்த விவ்ரந்த் சர்மா ஆகாஷ் மாத்வால் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து, ஹென்ரிச் கிளாசென் பேட்டிங் செய்ய அவ்ந்தார்.
மறுமுனையில், அதிரடியாக விளையாடிய, மயங்க் அகர்வாலும் 46 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆகாஷ் மத்வால் பந்தில் இஷான் கிஷண் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் அவுட் ஆனதும் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்தது. கிளென் பிலிப்ஸ் 1 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 18 ரன்னிலும், ஹாரி ப்ருக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
ஏய்டன் மர்க்ரம் 13 ரன்னும் சன்விர் சிங் ரன்களுடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு, 200 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஆகாஷ் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை பேட்டிங்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 201 ரன் ரேட்டை 11.4 ஓவரில் மும்பை எடுத்தால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்று செல்லும். தற்போது மும்பை அணி 3.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
தொடர்ந்து மும்பை அதிரடியாக விளையாடியது. இந்த நிலையில், மும்பை வெற்றிக்கு 61 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்படுகிறது. அதாவது, அந்த அணி 9.5 ஓவரில் 114 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா (44), கீரின் (52) களத்தில் உள்ளனர்.
ரோகித் சர்மா அரைசதம்
இந்த நிலையில் ரோகித் அரை சதம் அடித்தார். தற்போது, மும்பை ஓபனர்கள் ரோகித், கீரின் ஆகியோர் முறையே 55, 64 ரன்கள் குவித்துள்ளனர். அணியின் வெற்றிக்கு 46 பந்துகளில் 63 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், ரோகித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் தாகர் பந்துவீச்சில் நிதிஷ் குமாரிடம் ரெட்டியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கேமரான் கிரீன் (77), சூர்ய குமார் யாதவ் (7) களத்தில் உள்ளனர்.
இவர்கள் அணியை வெற்றி அழைத்துச் சென்றனர். கேமரான் கிரீன் 47 பந்துகளில் 100 ரன்னுடனும், சூர்ய குமார் யாதவ் 25 ரன்னுடனும் களத்தில் நின்றனர். மும்பை அணி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"