Advertisment

10- 15 ரன்கள் கூடுதலாக நாங்க எடுத்திருக்க வேண்டும்: தோல்விக்கு பிறகு தோனி

பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய தோனி, 'நாங்கள் பேட்டிங் செய்யும் போது கடைசி சில ஓவர்களில் 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம்.' என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
MS Dhoni CSK captain on losing to PBKS Tamil News

Chennai Super Kings (MS Dhoni CSK captain)

CSK vs PBKS IPL 2023 Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கிய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

Advertisment

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் ர் தொடக்க வீரர் டெவோன் கான்வே 92 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 42 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்கந்தர் ராசா அதிரடியாக மட்டையை சுழற்றி 3 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால், சென்னை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் பெற்றது.

தோனி பேட்டி

இந்நிலையில், சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி பேசுகையில், "என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது கடைசி சில ஓவர்களில் 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். எங்கள் பந்துவீச்சுக்கு கொஞ்சம் நேர்த்தி தேவைப்பட்டது. மெதுவான பந்துகள் நன்கு சென்றன.

publive-image

எங்கள் வீரர்கள் தொடர்ந்து ரன்களை குவித்து வருகின்றனர். 200 ரன்கள் சமமான ரன்கள் தான். ஆனால் நாங்கள் இரண்டு மோசமான ஓவர்களை வீசினோம். நிலைமைகளை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. நீங்கள் அந்தப் பக்கம் அடிபட விரும்பவில்லை. என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும். செயல்படுத்தல் அல்லது திட்டமிடல் சரியாக இருக்க வேண்டும். பத்திரன சிறப்பாக பந்து வீசினார். முதல் ஆறு ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட முடியும். என்ன லயனில் பந்து போட வேண்டும் என்பது நாங்கள் அறிவோம்." என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ms Dhoni Punjab Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment