IPL 2023 - Chennai Super Kings vs Gujarat Titans, MS Dhoni Tamil News: 10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் வெற்றி பெற்றது.
சாதனை
இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி 7 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். அவர் சிக்ஸரை பறக்க விட்டதன் மூலம் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அந்த சிக்சர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி அடித்த 200வது சிக்சராகும். அதேபோல், ஒரு ஐபிஎல் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
காயம்
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி 41 வயதிலும் டைவ் அடித்து பந்தை பிடிக்க முயன்றது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முழங்கால் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் சீசனுக்கான தொடக்க ஆட்டத்தில் விளையாடுவதில் சந்த்கேம் எழுந்தது. ஒருவேளை அவர் ஆடாவிட்டால் கான்வே அல்லது ராயுடு கீப்பிங் செய்வார்கள் என்றும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. எனினும், தொடக்க ஆட்டத்தில் அணியை தோனி களம் புகுந்தார்.
நேற்றை ஆட்டம் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், ராகுல் டெவாடியாவுக்கு தீபக் சாஹர் வீசிய பந்து டெவாடியாவின் இடது காலில் பட்டு பின்புறம் வேகமாக உருண்டோடியது. அதை மறைக்க விக்கெட் கீப்பர் இளம் சிங்கம் போல் தோனி பாய்ந்தார். பந்தை மறைத்த பின் காயம் இருந்த இடத்தில் மீண்டும் அழுத்தம் ஏற்பட்டு வலியால் அவதியுற்றார். இது ரசிகர்களை பெரிதும் கவலையடையச் செய்தது.
ரீப்ளேக்கள் தோனி வலியில் அவதியுறுவதை தெளிவாகக் காட்டியது. மேலும் பிசியோ அவரைச் சந்தித்து அவருக்கு உதவினார். தோனியும் கடைசிவரை களத்தில் இருந்து ஆட்டம் முடிந்த பிறகே வெளியேறினார். இருப்பினும், தோனிக்கு ஏற்பட்டுள்ள காயம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil