MS Dhoni on injury list with CSK Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணி அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. வருகிற திங்கள் கிழமை (ஏப்ரல் 17ம் தேதி) இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.
தோனிக்கு காயம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி உள்பட அணியின் முன்னணி வீரர்கள் காயத்தால் அவதியுற்று வருகின்றனர். தோனியின் காயம் தொடர்பாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசுகையில், “அவர் தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவருடைய சில அசைவுகளில் நீங்கள் அதைப் பார்க்க முடியும். இது அவருக்கு ஓரளவு தடையாக இருக்கிறது. ஆனால் அவர் இன்றும் நீங்கள் பார்த்தது போல் நமது சிறந்து வீரராக இருக்கிறார். அவரது உடற்தகுதி எப்போதும் மிகவும் தொழில்முறையானது.

அவர் போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வந்துவிட்டார். அதனால் அவருக்கு நிறைய [அதற்கு முன்] செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் ஃபிட்டாக இருப்பார். ராஞ்சியில் வலை பயிற்சியை மேற்கொண்டார். ஆனால் அவரது முக்கிய சீசன் அவர் சென்னைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே [பிட்னஸ்] செய்துவிடுவார்கள். மேலும் அவர் மேட்ச்-ஃபார்மிற்கு திரும்புகிறார். மேலும் அவர் நன்றாக விளையாடுவதை நீங்கள் இன்னும் பார்க்கலாம். எனவே அவர் தன்னை நிர்வகிப்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, மேலும் அவர் எப்போதும் தன்னை வேகப்படுத்துகிறார்.” என்று கூறியுள்ளார்.
A warrior. A veteran. A champion – The One and Only! 🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) April 13, 2023
Full post match 📹 https://t.co/LuLJ13LVt3#CSKvRR #WhistlePodu #Yellove 💛 @msdhoni pic.twitter.com/dgsuPgT92y
முன்னணி வீரர்கள் காயம்
சென்னை அணியின் முன்னணி வீரரான வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், சிசண்டா மகலா போன்ற வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில், தீபக் சாஹர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவர் அணிக்கு திரும்ப இன்னும் 2 – 3 வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டர் வீரருமான பென் ஸ்டோக்ஸுக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து பந்துவீச அழைக்கப்படவில்லை. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அதை தினசரி அடிப்படையில் மருத்துவர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.

கடந்த சீசன் முழுவதையும் காயத்தால் தவறவிட்ட வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் இன்னும் குணமடைந்து வருகிறார். நேற்று திங்கட்கிழமை, சிமர்ஜீத் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவரது ரன்-அப்பை அடிக்கடி தவறவிட்டார் மற்றும் கடந்த சீசனில் தோனி மற்றும் ஃப்ளெமிங்கைக் கவர்ந்த ரிதம் அவரிடம் இல்லை. கடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டி டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.
தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான சிசண்டா மகலா ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். அவருக்கும் நேற்றைய ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டுள்ளது. அவர் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் காயம் காரணமாக முழு தொடரில் இருந்தும் வெளியேறியதை அடுத்து அவர் மாற்று வீரராக சென்னை அணியில் தற்செயலாக இணைந்தார். ஏற்கனவே இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி இல்லாத நிலையில், சிசண்டா மகலாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil