MS Dhoni Tamil News: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடந்த 7-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடியது. சென்னை அணியின் வீரர்கள் சிக்சர் மழை பொழிந்தனர். அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்கள் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் குவித்தது.
Innings Break!
A cracking batting performance from @ChennaiIPL as they post 210/7 on the board! 💪 💪
The @LucknowIPL chase will begin shortly. 👍 👍
Scorecard ▶️ https://t.co/uEhq27KiBB#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/i3vrkIU0e4— IndianPremierLeague (@IPL) March 31, 2022
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சிவம் துபேயின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி தனது ஆட்டத்தை சிக்ஸருடன் தொடங்கினார். அவர் மேலும் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தோனி அனைத்து விதமான டி-20 போட்டிகளையும் சேர்த்து 7 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினார். அவர் இந்த சாதனையை படைக்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
முன்னதாக, இந்த சாதனையை விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் படைத்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் தோனி மற்றொரு மைல்கல்ளையும் அடைந்தார். விக்கெட் கீப்பராக அவர் அனைத்து விதமான டி-20 போட்டிகளிலும் சேர்த்து 200 கேட்ச்களை பிடித்துள்ளார்.
Thala Takkar Doi! 💥🥳#LSGvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/avaufg9YJb
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
Milestone Mahi-mai! Catching feelings for #THA7A 💛#LSGvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/PDIQ2LQivQ
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.