scorecardresearch

பக்கத்து வீட்டு பெண் செய்த உதவி: சிஎஸ்கே அணிக்கு கிடைத்த பொக்கிஷம்!

மூன்று வீரர்களையும் தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கச் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சிஎஸ்கே வீரர் முகேஷ் செளதரி.

பக்கத்து வீட்டு பெண் செய்த உதவி: சிஎஸ்கே அணிக்கு கிடைத்த பொக்கிஷம்!

சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மிக முக்கியமான விக்கெட்டுகளான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், டெவால்டு பிரெவிஸ் என மூன்று வீரர்களையும் தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கச் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சிஎஸ்கே வீரர் முகேஷ் செளதரி.

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் தங்கி முகேஷ் படித்துக் கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்கு அருகே இருந்த வைஷாலி சாவந்த் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்.

வைஷாலியுடன் முகேஷ்.

இனி அவரது வார்த்தைகளிலிருந்து…
ஒரு நாள் அவரிடம் எனது வீட்டில் உள் அலங்காரம் செய்யும்போது சில பொருட்களை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாமா என்று முகேஷிடம் கேட்டேன்.

அப்போது மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ஒத்துக் கொண்டார். அதன் பிறகு எனக்கு நல்ல நண்பரானார்.
நான் அவரை ஒரு சகோதரராகக் கருதினேன். தனியாக இருப்பதால் அவருக்கு அவ்வப்போது உணவு சமைத்து கொடுப்பேன். எங்கள் வீட்டு பிள்ளை போல் பார்த்துக் கொண்டோம்.

அவர் உடல் நிலை சரியில்லாமல் போகும் நேரத்திலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
மனச்சோர்வு அடையும்போதெல்லாம் நான் நல்ல புத்தகங்களை அளித்து படிக்கச் சொல்வேன்.
பள்ளியில் 80 சதவீத மதிப்பெண் எடுத்தாலும் அவருக்கு பிடித்தது என்னவோ கிரிக்கெட் தான்.

என்னிடம் வந்து நான் கிரிக்கெட்டை தான் எனது வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள போகிறேன் என்றார்.

நான் அவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினேன். பல தியாகங்களை செய்ய வேண்டி வரும் அதற்கு தயாராக இரு என்று கூறினேன். அப்போது முதல் முகேஷின் ஆலோசகராகவும் மாறினேன்.
சின்ன சின்ன கிளப் அணிகளில் முதலில் முகேஷன் விளையாடினார்.

ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய பிறகு சக வீரர்களிடம் இருந்து பாராட்டு பெறும் முகேஷ்.

பின்னர், மகாராஷ்டிர கிரிக்கெட் டீமுக்கு பயிற்சியாளராக இருக்கும் சுரேந்திர பவே பயிற்சிய அளிக்கும் 22-யார்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தார். முதல் சந்திப்பிலேயே சுரேந்திர பவே
வியந்தார் என்றார் சாவந்த்.

தோனியுடன் அவர் விளையாடுவதால் ஐபிஎல் ஆட்டத்துக்கு பிறகு முகேஷின் அணுகுமுறையைப் பொறுத்தவரை ஆட்டத்தில் நிறைய மாறுதல் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் ஒரு நல்ல பந்துவீச்சாளராக வருவார் என்று வைஷாலி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

HBD: பாகிஸ்தானுக்கு விளையாடிய சச்சின்… கிரிக்கெட் கடவுள் பற்றி பலரும் அறியாத 7 உண்மைகள்

பவே கூறுகையில், முகேஷிடம் நல்ல திறமை இருந்ததை அறிந்து கொண்டேன். பல அணிகளில் விளையாடிய பிறகே தேர்வுக் குழுவின் கவனத்துக்கு வந்தார் முகேஷ் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Mukesh realised that the bossy but caring neighbor would soon become his mentor