Nicknames of Famous Indian Cricket Players Tamil News: வீட்டில் என்னாதான் பார்த்து பார்த்து பெயர் வைத்தாலும், நண்பர்கள் வைக்கும் செல்லப் பெயர்கள் பிரபலமான ஒன்றாகவும், எவ்வளவு வயதானாலும், தோற்றங்கள் மாறினாலும் நிலைத்து நிற்கின்றனர். அவ்வகையில், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய மற்றும் விளையாடி வரும் வீரர்களின் செல்லப் பெயர்களை இங்கு பார்க்கலாம்.
ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணியின் வேகப் புயலாக வலம் வரும் பும்ராவை ‘பூம்’ (BOOM) என்றும், ஜெஸ்ஸி (JESSI) என்றும் சக வீரர்கள் அழைப்பதுண்டு.
விராட் கோலி

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை ‘சீக்கு’ என்று அழைப்பார்கள். அவர் இளம் வீரராக இருந்த போது அந்த செல்லப்பெயரில் அழைக்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் களமிறங்கிய போதும் அந்த பெயருடனே அழைக்கப்பட்டார். இப்பெயரை மூத்த வீரர்கள் தான் உச்சரிப்பார்கள். இளம் வீரர்கள் அவரை ‘விராட் பையா’ அல்லது ‘விராட் பாஜி’ என்று தான் அழைத்து வருகிறார்கள்.
ரோகித் சர்மா

இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு செல்லப்பெயர் என்ற ஒன்று இல்லை. அவரை ரோகித் என்று தான் கோலி அழைப்பார். இளம் வீரர்கள் அவரை ‘ரோகித் பையா’ என்று அழைப்பார்கள். ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வரும் அவரை, சில வெளிநாட்டு வீரர்கள் ‘ரோ’ என சுருக்கமாக அழைப்பதுண்டு.
எம்.எஸ் தோனி</strong>

முன்னாள் இந்திய கேப்டனான தோனியை பள்ளியில் நண்பர்கள் ‘மாஹியா’ என்று அழைப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடியெடுத்து வைத்தது முதல் அவரை ‘மாஹி’ எனவும், ‘மாஹி பையா’ எனவும் வீரர்கள் அழைத்து வருகிறார்கள். ஆனால், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழிநடத்த தொடங்கியது முதல் அவரை ரசிகர்கள் ‘தல’ என்ற செல்லப்பெயருடன் அழைத்து வருகிறார்கள்.
சவுரவ் கங்குலி

முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜெஃப்ரி பாய்காட் கங்குலியை ‘பிரின்ஸ் ஆஃப் கொல்கட்டா’ என்று அழைப்பது வழக்கம். ஆனால், அவரை அனைவரும் ‘தாதா’ என்ற செல்லப்பெயரால் தான் அழைப்பார்கள்.
சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரை பொதுவாக அனைவரும் ‘சச்சின் பாஜி’ என்று அழைப்பது வழக்கம். ஆனால், அவரது சிறுவயது பயிற்சியாளர் அவரை ‘டெண்டியா’ என்று பாசத்துடன் அழைப்பாராம்.
ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவானை அனைவரும் ‘கப்பர்’ என்று அழைப்பதுண்டு.
ராகுல் டிராவிட்

முன்னாள் இந்திய வீரரும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான டிராவிட்டை ‘ஜாம்மி’ என்று அழைப்பார்கள். அவரது தந்தை ஷரத் டிராவிட் ஒரு காலத்தில் கிசான் ஜாம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். கிசான் ஜாம் விளம்பரங்களிலும் அவர் நடித்து இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil