Advertisment

PBKS vs GT Highlights: சுப்மன் கில் அரை சதம்; பஞ்சாப்-ஐ வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

பேட்டிங், பவுலிங்கில் அசத்திய குஜராத்; சுப்மன் கில் அரை சதம் பஞ்சாப்-ஐ வீழ்த்தி குஜராத் வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pbks vs gt live score ipl 2023 punjab kings vs gujarat titans latest scorecard updates in tamil

PBKS vs GT Live Score, IPL 2023: Punjab Kings (PBKS) and Gujarat Titans (GT) seek their third victory in IPL 2023

IPL 2023 Punjab Kings vs Gujarat Titans Highlights in tamil: ஐ.பி.எல் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. நடப்பு சீசனில் 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ள பஞ்சாப் அணி சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisment

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

பஞ்சாப் கிங்ஸ்

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், ஜிதேஷ் ஷர்மா, பானுகா ராஜபக்சே, சாம் கரன், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

குஜராத் டைட்டன்ஸ்

விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ஜோசுவா லிட்டில், மோகித் ஷர்மா

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராப்சிம்ரன் சிங் மற்றும் தவான் களமிறங்கினர். இரண்டாவது பந்திலே பிராப்சிம்ரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து மேத்யூ ஷார்ட் களமிறங்கி அதிரடியாக ஆடினார். இருப்பினும் மறுமுனையில் ஆடிவந்த தவான் 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ராஜபக்சே களமிறங்கி, நிதானமாக விளையாடினார். பவுண்டரிகளாக அடித்து ரன் சேர்த்து வந்த மேத்யூ 36 ரன்களில் அவுட் ஆனார். 26 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். அடுத்து ராஜபக்சே உடன் ஜிதேஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர்.

பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 92 ஆக இருந்தப்போது ஜிதேஷ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சாம் கரணும் ரன் சேர்க்க தடுமாறினார். குஜராத் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி, பஞ்சாப் அணியை திணறடித்தனர். ரன் சேர்க்க தடுமாறிய ராஜபக்சே 20 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ஷாரூக் கான் களமிறங்கி அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் சாம் கரண் 22 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஹர்பிரீத் களமிறங்கினார். 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய ஷாரூக் கான் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். ஹர்பிரீத் 8 ரன்களில் நின்றிருக்க, கடைசி பந்தில் ரிஷி தவான் ரன் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. குஜராத் தரப்பில் மோகித் 2 விக்கெட்களையும், ஷமி, ஜோஷ்வா, ஜோசப், ரஷித் கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

குஜராத் பேட்டிங்

குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். சஹா பவுண்டரிகளாக விளாசினார். இருவரும் முதல் விக்கெட்க்கு 48 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய சஹா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக சுதர்சன் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பாண்டியா 8 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக டேவிட் மில்லர் களமிறங்கிய நிலையில், கில் அரை சதம் கடந்தார். இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கில் அவுட் ஆனார். கில் 49 பந்துகளில் 67 ரன்களில் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். அடுத்ததாக ராகுல் திவேதியா களமிறங்கினார். அவர் 5 ரன்கள் எடுக்க குஜராத் அணி வெற்றி பெற்றது. குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மில்லர் 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Pbks Vs Gt Hardik Pandya Gujarat Titans Punjab Kings Shikhar Dhawan Ipl News Ipl Cricket Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment