Punjab Kings vs Royal Challengers Bangalore IPL 2023 Live Score in tamil:10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், மொகாலியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. பெங்களுரு அணியின் கேப்டனாக இன்று விராட் கோலி செயல்படுகிறார். டு பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார்.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி - டு பிளசிஸ் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடினர். இருவரும் பந்துகளை அடித்து நொறுக்கி மாறி மாறி பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து, டு பிளசிஸ் - கோலி ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்த ஜோடியை உடைக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடிய நிலையில், 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 59 ரன்கள் எடுத்த கோலி ஹர்ப்ரீத் ப்ரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்திலே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டு பிளசிஸ் 56 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பஞ்சாப் அணி
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றா இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதரவா தைடே மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களம் இறங்கினர். இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அதரவா தைடே 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஹமது சிராஜ் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். அவரை அடுத்து வந்த, மத் ஷார்ட் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வானிண்டு ஹசரங்கா பந்தில் போல் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து வந்த, லயம் லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் முஹமது சிராஜ் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
இவரை அடுத்து வந்த, ஹர்பிரீத் சிங் பாட்டியா, 13 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சாம் கரன் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறு புறம் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பர்னெல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். ஜிதேஷ் ஷர்மா அதிரடியாக விளையாடி, 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்தில், ஷாபாஸ் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், பஞ்சாப் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ்.
பஞ்சாப் கிங்ஸ்:
அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil