10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
Indian Premier League, 2023Sawai Mansingh Stadium, Jaipur 04 June 2023
Rajasthan Royals 144/6 (20.0)
Lucknow Super Giants 154/7 (20.0)
Match Ended ( Day – Match 26 ) Lucknow Super Giants beat Rajasthan Royals by 10 runs
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், ரவி பிஷ்னோய்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மேயர்ஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படோனி 1 ரன்னிலும், ஹூடா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கிய நிலையில், மேயர்ஸ் அரை சதம் அடித்தார். ஆனால் 51 ரன்களில் மேயர்ஸ் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். பூரனும் ஸ்டாய்னிஸூம் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஸ்டாய்னிஸ் 21 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து குருணால் பாண்டியா களமிறங்கினார். 19.5 ஓவரில் பூரன் 28 ரன்களில் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் யுத்வீர் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்களையும், போல்ட், சந்தீப், ஹோல்டர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினார். இருவரும் லக்னோ பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 44 ரன்களில் அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக தேவ்தத் படிக்கல் களமிறங்கிய சிறிது நேரத்திலே பட்லர் அவுட் ஆனார். அவர் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் பந்தில் பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹெட்மயர் 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் ராஜஸ்தான் அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார். படிக்கல் – ரியான் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அவேஷ் கான் வீசினார். முதல் 2 பந்துகளில் பவுண்டரியுடன் ரியான் 5 ரன்கள் சேர்த்தார். 3 ஆவது பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் டக் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த அஸ்வின் 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால், ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றிப் பெற்றுள்ளது. லக்னோ தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்களையும், ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil