IPL 2023 RR vs SRH Score Highlights in Tamil: ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
இதையும் படியுங்கள்: DC vs RCB Live Score: டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு; டெல்லி பவுலிங்
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். இருவரும் ஹைதராபாத் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். அவர் ஜான்சன் பந்தில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக சாம்சன் களமிறங்கினார். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன்குவித்தனர். சிறப்பாக ஆடிய பட்லர் அரைசதம் விளாசினார்.
முதல் விக்கெட் 54 ரன்களில் வீழ்ந்த நிலையில், இரண்டாவது விக்கெட் 192 ரன்களில் தான் வீழ்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட பட்லர் 95 ரன்களில் அவுட் ஆனார். 59 பந்துகளைச் சந்தித்த பட்லர் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகள் விளாசினார். புவனேஸ்வர் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் பட்லர் அவுட் ஆனார். அடுத்ததாக ஹெட்மயர் களமிறங்கினார். அதேநேரம் மறுமுனையில் ஆடிவந்த சாம்சன் அரைசதம் விளாசினார். இந்தநிலையில் ராஜஸ்தான் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. சாம்சன் 38 பந்தில் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். ஹெட்மயர் 7 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர், ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஹைதராபாத் பேட்டிங்
ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அன்மோல்பீரித் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக ஆடிவந்த அன்மோல் 33 ரன்களில் அவுட் ஆனார். அவர் சஹல் பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். மறுமுனையில் ஆடிய அபிஷேக்கும் அதிரடியாக ஆடி ரன்குவித்தார். சிறப்பாக விளையாடி வந்த அபிஷேக் அரை சதம் விளாசினார். அணியின் எண்ணிக்கை 116 ஆக இருந்தப்போது அபிஷேக் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அஷ்வின் பந்தில் சஹலிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கிளாசன் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அவர் சஹல் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக மார்க்ரம் களமிறங்கினார். இந்தநிலையில் அரை சதத்தை நெருங்கிய ராகுல் திரிபாதி 47 ரன்களில் அவுட் ஆனார். அவர் சஹல் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்தார். ராகுல் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அடுத்து வந்த ஹெட்மயர் சிக்சர்களாக விளாசினார். இதற்கிடையில் மார்க்ரம் 6 ரன்களில் சஹல் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்ததாக அப்துல் சமத் களமிறங்கினார். மறுமுனையில் ஆடிவந்த ஹெட்மயர் 25 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்ததாக ஜான்சன் களமிறங்கிய நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பால் நோபால் ஆனது. அதில் கிடைத்த வாய்ப்பில் அப்துல் சமத் சிக்சர் தூக்கி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் பந்துவீச்சில் சஹல் 4 விக்கெட்களையும், அஷ்வின், குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்
ராஜஸ்தான்ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ஆர்.அஷ்வின், முருகன் அஷ்வின், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்
சன்ரைசர்ஸ்ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), கிளன் பிலிப்ஸ், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், விவரண்ட் சர்மா, புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.