IPL 2023 RCB playoff scenario Explained Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடக்கும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

ஆர்.சி.பி ரன் ரேட் பிரமாதம்
நடப்பு சீசனில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், பெங்களுருவின் ரன்-ரேட் (+0.166) வலுவான நிலையை எட்டியது.
பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்குள் நுழையலாம். இதில், ஒன்றில் தோற்றால் கூட அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும். எனவே அந்த அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
SRH v RCB Game Day Preview
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 18, 2023
A must-win game at Siraj’s home ground, and we find out how prepared the boys are, on @hombalefilms brings to you Game Day.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #SRHvRCB pic.twitter.com/YFWUXiP0K4
2 மேட்ச் முக்கியம்
பெங்களூரு அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில், ஐதராபாத் மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தினால் 16 புள்ளிகளை எட்டும். பஞ்சாப் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்திய நிலையில், இந்த இரண்டு வெற்றிகளும் அவர்களுக்கு தகுதி பெற போதுமானதாக இருக்கும்.
இப்போதைக்கு, பெங்களூரு அணி எதிர்கொள்ளும் ஒரே போட்டி மும்பை இந்தியன்ஸிடம் இருந்து தான். அவர்கள் மீதமுள்ள 2போட்டிகளில் வென்றால், 16 புள்ளிகளுடன் மும்பையை முந்திச் செல்வார்கள். அவர்களின் நெட் ரன்ரேட் கூடுதல் பலமாக இருக்கிறது.
Grinning cos it’s Game Day! 😬
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 18, 2023
Don’t forget to wear your smiles, 12th Man Army! ☑️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #SRHvRCB pic.twitter.com/eTmmlWXuoV
இருப்பினும், கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தால் பெங்களூரு அணி பெரும் பின்னடைவை சந்திக்கும். அந்த சூழ்நிலையில், பெங்களூரு அணியால் வெறும் 14 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். மேலும் இது ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களின் பிளேஆஃப் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இதேபோல், சென்னை மற்றும் லக்னோ அணிகள் தானாகவே பிளேஆஃப்-க்கு தகுதி பெற்று விடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil