IPL 2023 Royal Challengers Bangalore vs Delhi Capitals match highlights in tamil: 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று மாலை 3:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
Indian Premier League, 2023M.Chinnaswamy Stadium, Bengaluru 09 June 2023
Royal Challengers Bangalore 174/6 (20.0)
Delhi Capitals 151/9 (20.0)
Match Ended ( Day – Match 20 ) Royal Challengers Bangalore beat Delhi Capitals by 23 runs
டாஸ் வென்ற டெல்லி பவுலிங்; பெங்களூரு பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் விராட் கோலி 50 ரன்கள் எடுத்தார். மேலும், டுபிளசிஸ் 22 ரன்களும், லோம்ரோர் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 24 ரன்களும், அகமது 20 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டெல்லி பேட்டிங்
டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பிரித்வி ஷா களமிறங்கினர். பிரித்வி ஷா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த மிட்சல் மார்ஷூம் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய யாஷ் துல் 1 ரன்னில் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்ததாக மணீஷ் பாண்டே களமிறங்கி அதிரடி காட்டினார். மறுபுறம் பவுண்டரிகளாக அடித்து ரன் சேர்த்த வார்னர் 19 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து உள்ளே வந்த அபிஷேக் 5 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த அக்சர் 21 ரன்களில் அவுட் ஆனார். அதுவரை சிறப்பாக ஆடி வந்த மணீஷ் பாண்டே அரை சதம் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த லலித் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து நார்ட்ஜே களமிறங்கிய சிறிது நேரத்திலே அமன் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக குல்தீப் யாதவ் களமிறங்கினார். இந்தநிலையில், டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் டெல்லி அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் கலக்கிய பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள்:
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil