scorecardresearch

மிஸ் பீல்டிங் செய்த மூத்த வீரர் சாவ்லா… எரிச்சலடைந்த ரோகித் உச்சகட்ட கோபம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூத்த சக வீரரான பியூஷ் சாவ்லா மீது கடும் கோபமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma angry at Piyush Chawla  GT vs MI, IPL 2023 Tamil News

Rohit Sharma – Piyush Chawla GT vs MI, IPL 2023 Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்றிரவு அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக்கில் நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.

குஜராத் அணி தரப்பில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் சுப்மன் கில் 56 ரன்களும், மில்லர் 46 ரன்களும், அபினவ் மனோகர் 42 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, 208 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணியில் நேஹால் வதேரா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் ரோகித் (3 ரன்), இஷான் கிஷன் (13 ரன்), திலக் வர்மா (2 ரன்) போன்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரோகித் உச்சகட்ட கோபம்

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூத்த சக வீரரான பியூஷ் சாவ்லா மீது கடும் கோபமடைந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் இன்னிங்ஸின் 17வது ஓவரில், ஷார்ட் தேர்ட் மேன் இடத்தில் இருந்த சாவ்லா, களத்தில் எளிதாக மறைக்கக் கூடிய பந்தை தடுத்து நிறுத்தத் தவறினார். பந்து அவரது கால்களுக்கு இடையில் நுழைந்து பவுண்டரியைத் தொட்டது. அவரது இந்த செயலால் கேப்டன் ரோகித் கடுமையாக கோபமடைந்து கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். சாவ்லாவும் அவரது முயற்சிகளில் பெரும் ஏமாற்றமடைந்தார். தற்போது இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

41 வயதான பியூஷ் சாவ்லா இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Rohit sharma angry at piyush chawla gt vs mi ipl 2023 tamil news