scorecardresearch

RCB vs CSK Highlights: கடைசி வரை பரபரப்பு… பெங்களூருவை தகர்த்த சென்னைக்கு ‘சூப்பர்’ வெற்றி!

பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி அசத்தல் வெற்றியைப் பெற்றது

Royal Challengers Bangalore vs Chennai Super Kings IPL 2023 Live Score Tamil: 
IPL 2023 Live, RCB vs CSK Scorecard Updates: Virat Kohli and MS Dhoni's side locking horns at Bengaluru today (Monday, April 17).

Royal Challengers Bangalore vs Chennai Super Kings IPL 2023 Highlights Tamil: 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கிய 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

Indian Premier League, 2023M.Chinnaswamy Stadium, Bengaluru   08 June 2023

Royal Challengers Bangalore 218/8 (20.0)

vs

Chennai Super Kings   226/6 (20.0)

Match Ended ( Day – Match 24 ) Chennai Super Kings beat Royal Challengers Bangalore by 8 runs

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவோன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் 3 ரன்னில் ருதுராஜ் அவுட் ஆனார். அதன்பிறகு களத்தில் இருந்த கான்வே உடன் ஜோடி அமைத்த ரகானே 19 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரியை துரத்தி 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர், கான்வே துபேவுடன் ஜோடியில் சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை சுழற்றிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் மாறி மாறி சிக்ஸர் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். இவர்களது அதிரடியான ஆட்டத்தால் சென்னை ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

தனது மிரட்டல் அடியை தொடர்ந்திருந்த கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராயுடு துபேவுடன் ஜோடி சேர்ந்தார். அரைசதம் விளாசிய துபே 27 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்களை சிதறவிட்டு 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் 2 சிக்ஸர் அடித்த மொயீன் அலி 19 ரன்கள் எடுத்தார். ஒரு சிக்ஸர் அடித்த ஜடேஜா 10 ரன்களும், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த ராயுடு 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. இதனால், பெங்களுரு அணிக்கு 227 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணியில் தொடக்க வீரரான விராட் கோலி ஒரு பவுண்டரியை விரட்டி 6 ரன்னிலும், அடுத்து வந்த மஹிபால் லோமரோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

களத்தில் இருந்த கேப்டன் டு பிளெசிஸ் – கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சென்னையின் பந்துவீச்சை வெளுத்து வாங்க, பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த போராடினர். இந்த ஜோடியில் அபாரமாக மட்டையைச் சுழற்றிய மேக்ஸ்வெல் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினர். இந்த ஜோடியை உடைக்க நீண்ட நேரம் சென்னையின் பந்துவீச்சாளர்கள் போராடினர். அந்த தருணத்தில் தீக்ஷனாவின் பந்தை வளைத்து அடிக்க முயன்ற மேக்ஸ்வெல் 76 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் தோனி வசம் கேட்ச் ஆனார்.

4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்த கேப்டன் டு பிளெசிஸ் மொயீன் அலி வீசிய அடுத்த ஓவரில் அவுட் ஆகி வெளியேறினர். எனினும், பெங்களுரு அணி வெற்றி இலக்கை நோக்கி சீராக பயணித்தது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டி ஆட்டத்தில் பரபரப்பை கூட்டினார். ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு இருந்த ஷாபாஸ் அகமது-வின் விக்கெட்டை மதீஷா பத்திரனா கைப்பற்றினாலும், இம்பாக்ட் பிளேயராக வந்த சுயாஷ் பிரபுதேசாய் துஷார் தேஷ்பாண்டேவின் 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து மேலும் பரபரப்பை கொண்டு வந்தார்.

பெங்களுருவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மதீஷா பத்திரனா வீசிய அந்த ஓவரில் சுயாஷ் பிரபுதேசாய் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க, 3 பந்துகளுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. எனினும், அடுத்தடுத்த பந்துகளில் கம்பேக் கொடுத்த பத்திரனா கடைசி பந்தில் பிரபுதேசாய் விக்கெட்டை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில், பெங்களூருவை தகர்த்த சென்னை அணிக்கு 8 வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி கிடைத்தது.

சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், மதீஷா பத்திரனா 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்ஷனா, மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
23:19 (IST) 17 Apr 2023
கடைசி வரை பரபரப்பு… பெங்களூருவை தகர்த்த சென்னைக்கு ‘சூப்பர்’ வெற்றி

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரு அணி 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நிலையில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

22:50 (IST) 17 Apr 2023
வெற்றியை நோக்கி பெங்களூரு!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரு அணி 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்துள்ளது.

பெங்களுருவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை.

22:35 (IST) 17 Apr 2023
மேக்ஸ்வெல் அவுட்!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரு அணி 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்த மேக்ஸ்வெல் 76 ரன்னில் அவுட் ஆனார்.

பெங்களூரு அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 81 ரன்கள் தேவை.

22:25 (IST) 17 Apr 2023
அதிரடி காட்டும் டு பிளெசிஸ் – மேக்ஸ்வெல்; நல்ல நிலையில் பெங்களூரு

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரு அணி 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.

களத்தில் டு பிளெசிஸ் – மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

22:04 (IST) 17 Apr 2023
பெங்களூருவுக்கு வலுவான தொடக்கம்; மிரட்டும் டு பிளெசிஸ் – மேக்ஸ்வெல்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரு அணி 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்துள்ளது.

களத்தில் டு பிளெசிஸ் – மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

21:18 (IST) 17 Apr 2023
ரன் மழை பொழிந்த சென்னை… பெங்களுருவுக்கு 227 ரன்கள் இலக்கு!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், பெங்களுரு அணிக்கு 227 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவோன் கான்வே 83 ரன்களும், ஷிவம் துபே ரன்களும் எடுத்தனர்.

21:03 (IST) 17 Apr 2023
மழை, மழை… பெங்களுருவில் ரன் மழை… நொறுக்கி அள்ளும் சென்னை!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.

21:00 (IST) 17 Apr 2023
ராயுடு அவுட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியை துரத்தி 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

20:54 (IST) 17 Apr 2023
அரைசதம் அடித்த துபே அவுட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய ஷிவம் துபே 52 ரன்னில் அவுட் ஆனார்.

20:46 (IST) 17 Apr 2023
கான்வே அவுட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த தொடக்க வீரர் கான்வே 6 பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 83 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

20:41 (IST) 17 Apr 2023
அதிரடியில் மிரட்டும் கான்வே – துபே!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது களத்தில் டெவோன் கான்வே – துபே ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர். சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

20:36 (IST) 17 Apr 2023
பெங்களுருவில் ரன் மழை; மிரட்டும் கான்வே – துபே!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது களத்தில் டெவோன் கான்வே – துபே ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர். சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

20:21 (IST) 17 Apr 2023
கான்வே அதிரடி அரைசதம்; வலுவான நிலையில் சென்னை!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசியுள்ளார். சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

20:16 (IST) 17 Apr 2023
ரகானே அவுட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 19 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரியை துரத்திய ரகானே 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

20:13 (IST) 17 Apr 2023
கான்வே – ரகானே ஜோடி அதிரடி ஆட்டம்; விக்கெட் வீழ்த்த போராடும் பெங்களூரு!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது களத்தில் டெவோன் கான்வே – அஜிங்க்யா ரஹானே ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர். சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

20:01 (IST) 17 Apr 2023
பெங்களுருவில் ரகானே-வின் வானவேடிக்கை; சென்னைக்கு அதிரடியான தொடக்கம்

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் அவுட் ஆகியுள்ளார்.

தற்போது களத்தில் டெவோன் கான்வே – அஜிங்க்யா ரஹானே ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர். சென்னை அணி பவர்பிளே (6 ஓவர்கள்) முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

19:44 (IST) 17 Apr 2023
ருது அவுட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

19:11 (IST) 17 Apr 2023
இரு அணிகளின் பிளேயிங் லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

19:10 (IST) 17 Apr 2023
இரு அணிகளின் பிளேயிங் லெவன்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ்

19:08 (IST) 17 Apr 2023
டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்; சென்னை முதலில் பேட்டிங்!

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்.

18:48 (IST) 17 Apr 2023
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ்

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மகேஷ் தீக்ஷனா, டுவைன் பிரிட்டோரியஸ், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்

இம்பாக்ட் பிளேயர் – அம்பதி ராயுடு

18:41 (IST) 17 Apr 2023
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்

இம்பாக்ட் பிளேயர் – சுயாஷ் பிரபுதேசாய்

18:39 (IST) 17 Apr 2023
நேருக்கு நேர்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை – பெங்களூரு அணிகள் 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

18:34 (IST) 17 Apr 2023
பெங்களூரு ஆடுகளம் எப்படி?

குறைவான பவுண்டரி தூரம் கொண்ட பெங்களூரு ஆடுகளதத்தில் ரசிகர்கள் ரன் மழையை தாராளமாக எதிர்பார்க்கலாம். இங்கு இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

18:27 (IST) 17 Apr 2023
ராவத்துக்கு பதிலாக பிரபுதேசாய்

பெங்களூரு அணி அனுஜ் ராவத்தை அவர்களின் தாக்க வீரராக நம்பிக்கை வைத்தது. ஆனால், அவர் தனது திறமையை வெளிப்படுத்த தவறி வருகிறார். அதனால், அவரது இடத்தில் சுயாஷ் பிரபுதேசாய்க்கு ஒரு வாய்ப்பை வழங்கலாம். அவர் முதலில் பேட் செய்தால், அவர்கள் சேஸிங் செய்யும் போது ஒரு பந்து வீச்சாளரை இம்பாக்ட் பிளேயராக களமிறக்கலம்.

18:23 (IST) 17 Apr 2023
பெங்களூரு அணி எப்படி?

சென்னை போன்றே பெங்களூரு அணியும் 2 வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக) 2 தோல்விகளுடன் (கொல்கத்தா, லக்னோவுக்கு எதிராக) 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (2 அரைசதம் உள்பட 197 ரன்), முன்னாள் கேப்டன் விராட் கோலி (3 அரைசதத்துடன் 214 ரன்), மேக்ஸ்வெல் (ஒரு அரைசதத்துடன் 100 ரன்) ஆகியோர் பேட்டிங்கின் தூண்களாக உள்ளனர்.

பெங்களூரூ அணி உள்ளூரில் ஆடுவதால் வரிந்து கட்டி நிற்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த தவறினால் எதிரணியின்பாடு திண்டாட்டம் தான். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய அனல் பறக்கும் என்று நம்பலாம்.

17:26 (IST) 17 Apr 2023
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை?

நடப்பு சீசனில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றி (லக்னோ, மும்பைக்கு எதிராக), 2 தோல்விகளை (குஜராத், ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது. அணியில் இப்போது காயம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், சிசாண்டா மகாலா இரு வாரங்கள் விளையாட வாய்ப்பில்லை. கால்பாதத்தில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. கேப்டன் தோனிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கால்முட்டி வலியால் அவதிப்படும் தோனி 'ரிஸ்க்' எடுத்து அணியை வழிநடத்த தயாராக உள்ளார்.

ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது. பேட்டிங்கில் டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, கேப்டன் தோனி, பந்து வீச்சில் ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே நல்ல நிலையில் உள்ளனர். இது அணிக்கு நல்ல சம நிலையை கொடுள்ளது.

17:23 (IST) 17 Apr 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Royal challengers bangalore vs chennai super kings ipl 2023 match today rcb vs csk scorecard updates in tamil