IPL 2023 RR vs CSK Highlights in tamil: 10 அணிகள் பங்கேற்று வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 37வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியை பவர் பிளே முடிவில் சென்னை அணி உடைக்க தவறிய நிலையில், 9வது ஓவரை வீசிய ஜடேஜா 27 ரன் எடுத்த பட்லரை அவுட் ஆக்கினார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார்.
அடுத்ததாக வந்த வீரர்களில் கேப்டன் சஞ்சு 17 ரன்னிலும், ஷிம்ரோன் ஹெட்மிய 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் 34 ரன்களும், தேவ்தத் பாடிக்கல் 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 203 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மதீஷா பத்திரனா, மஹீஷ் தீக்ஷனா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் அணி குவித்துள்ள 202 ரன்களே அங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே களமிறங்கினர். இந்த ஜோடியில் நல்ல தொடக்கம் கிடைக்காத கான்வே 8 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ருதுராஜ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த ரஹானே 18 ரன்னிலும், அடுத்து வந்த ராயுடு டக் - அவுட் ஆகியும் வெளியேறினர்.
பின்னர் களம் புகுந்த மொயீன் அலி - துபே ஜோடி பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினர். 50 ரன்களுக்கு மேல் குவித்த இந்த ஜோடியில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட மொயீன் அலி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய துபே 29 பந்துகளில் அரைசதம் அடித்து, ஆட்டத்தின் இறுதி பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடியில் இருந்த ஜடேஜா 23 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நெட் ரன்ரேட் (+0.376) குறைவாக உள்ள சென்னை அணி 3வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி அடுத்ததாக, வருகிற ஞாயிற்று கிழமை (ஏப்ரல் 30) மாலை 3:30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 41வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங் அணியை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:07 (IST) 27 Apr 2023சென்னை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 37 ரன்கள் தேவை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 37 ரன்கள் தேவை!
- 22:45 (IST) 27 Apr 202315 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. சென்னை அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 78 ரன்கள் தேவை!
- 22:37 (IST) 27 Apr 202314 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. சென்னை அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 90 ரன்கள் தேவை!
- 22:32 (IST) 27 Apr 202313 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. சென்னை அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு 43 பந்துகளில் 109 ரன்கள் தேவை!
- 22:19 (IST) 27 Apr 202310 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. சென்னை அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 132 ரன்கள் தேவை
- 22:09 (IST) 27 Apr 2023சென்னைக்கு சிறப்பான தொடக்கம்; களத்தில் ரஹானே - ருதுராஜ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது.
சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
- 21:18 (IST) 27 Apr 2023ஜெய்ப்பூரில் அதிகபட்ச ஸ்கோர்; சென்னைக்கு 203 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு 203 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார்.
ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் அணி குவித்துள்ள 202 ரன்களே இங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 21:04 (IST) 27 Apr 202319 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:59 (IST) 27 Apr 202318 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:53 (IST) 27 Apr 2023ஹெட்மியர் அவுட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியில் 8 ரன்கள் எடுத்த ஹெட்மியர் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:41 (IST) 27 Apr 2023அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; பந்துவீச்சில் மிரட்டும் சென்னை
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
துஷார் தேஷ்பாண்டே வீசிய 14 வது ஓவரில் 17 ரன்கள் எடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் (77 ரன்கள்) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ராஜஸ்தான் அணி 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:11 (IST) 27 Apr 2023பட்லர் அவுட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஜோடி களமிறங்கிய நிலையில், 27 ரன்கள் எடுத்த பட்லர் ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
- 20:08 (IST) 27 Apr 2023ஜெய்ஸ்வால் அரைசதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஜோடி களமிறங்கியுள்ள நிலையில், அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 5 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்துள்ளார்.
- 20:06 (IST) 27 Apr 2023‘சர்வதேச போட்டிக்கு டாட்டா காட்டுங்க’: 6 வீரர்களுடன் ஐ.பி.எல் அணிகள் பேரம் அம்பலம்!
இங்கிலாந்தை சேர்ந்த 6 முன்னணி வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் சுமார் 5 மில்லியன் பவுண்டுகள் (ரூ.51 கோடி) வரை ஊதியமாக பேரம் பேசி உள்ளனர்.
- 20:01 (IST) 27 Apr 2023ராஜஸ்தானுக்கு சிறப்பான தொடக்கம்; திணறும் சென்னை!
ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ராஜஸ்தான் அணி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது.
- 19:09 (IST) 27 Apr 2023இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
- 19:07 (IST) 27 Apr 2023இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
- 19:06 (IST) 27 Apr 2023டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு; சென்னை பவுலிங்!
இன்று இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கும் 37வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி பந்துவீசுகிறது.
- 18:43 (IST) 27 Apr 2023ஜெய்ப்பூர் பிட்ச் ரிப்போர்ட்!
ராஜஸ்தான் - சென்னை அணிகள் ஜெய்ப்பூரில் மோதும் இன்றைய போட்டி இந்த சீசனில் நடக்கும் 2வது ஆட்டம் ஆகும். ஏற்கனவே லக்னோவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 155 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை.
இந்த ஆடுகளம் சில வாய்ப்புகளுடன் பரபரப்பான ஆட்டத்தை ஏற்படுத்தலாம். இங்கு நடந்த கடைசி 5 டி20 போட்டிகளில், முதல் இன்னிங்ஸ் ஸ்கோரின் சராசரி 126 ரன்கள் ஆக உள்ளது.
- 18:41 (IST) 27 Apr 2023இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஹெட்மயர், துருவ் ஜூரெல், ஆர்.அஸ்வின், ஜாசன் ஹோல்டர், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
- 18:41 (IST) 27 Apr 2023இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, அஜிங்யா ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.
- 18:30 (IST) 27 Apr 2023ஹோல்டருக்கு பதில் ஆடம் ஜம்பா!
ஆடம் ஜம்பா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். ஜேசன் ஹோல்டரின் ஆல்ரவுண்ட் திறமைகளை ராயல்ஸ் அணி எவ்வளவு குறைவாகப் பயன்படுத்தியது என்பதை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய லெக்ஸ் ஸ்பின்னர் மீண்டும் களத்தில் சேர வாய்ப்புள்ளது.
- 18:29 (IST) 27 Apr 2023ஸ்டோக்ஸ், சாஹருக்கு ஓய்வு!
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் குதிகால் காயம் காரணமாக மற்றொரு ஐபிஎல் 2023 போட்டியில் இருந்து விலக உள்ளார். முன்னதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ஸ்டோக்ஸ் குறித்த புதுப்பிப்பை அளித்து, அவர் குணமடைய இன்னும் சில நாட்கள் தேவை என்றும், அணி அவசரப்பட வேண்டிய மனநிலையில் இல்லை என்றும் கூறினார். ஸ்டோக்ஸ் இந்த சீசனின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார்.
இந்த சீசனில் சென்னை அணியில் இல்லாத மற்றொரு குறிப்பிடத்தக்க வீரராக ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் உள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் வெளியே ஓய்வு எடுத்து வருகிறது. இதனால், அவர் விரைவில் களம் இறங்க மாட்டார் என்பது தெரிகிறது.
- 18:26 (IST) 27 Apr 2023நேரலை!
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் சென்னை - ராஜஸ்தான் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.
- 18:25 (IST) 27 Apr 2023நேருக்கு நேர்!
சென்னை - ராஜஸ்தான் அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னை அணியும், 12 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.
Spirits and kites high! 🤩
— Chennai Super Kings (@ChennaiIPL) April 27, 2023
Match day it is! 🥳rrvcsk whistlepodu yellove ipl2023 🦁💛 pic.twitter.com/pcPoLHirZt - 18:23 (IST) 27 Apr 2023பதிலடி கொடுக்குமா சென்னை!
ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர எல்லா வகையிலும் சென்னை அணி முயலும். எனவே, சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
- 18:17 (IST) 27 Apr 2023ராஜஸ்தான் அணி எப்படி?
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றியும் (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியும் (பஞ்சாப், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், துருவ் ஜூரெல் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பாதகமான அம்சமாக உள்ளது. எனவே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (12 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின் (இருவரும் தலா 9 விக்கெட்), சந்தீப் ஷர்மா (7 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
- 18:09 (IST) 27 Apr 2023வீறுநடையை தொடரும் வேட்கையில் சென்னை
எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முந்தைய 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்த சென்னை அணி தற்போது வீறுநடையை தொடரும் முனைப்புடன் இருக்கிறது.
சென்னை அணியின் பேட்டிங்கில் டிவான் கான்வே (4 அரைசதம் உள்பட 314 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (270 ரன்கள்), ரஹானே (209 ரன்கள்), ஷிவம் துபே (184 ரன்கள்) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். டிவான் கான்வே தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து இருப்பதும், முந்தைய ஆட்டத்தில் ரஹானே 24 பந்துகளில் அரைசத்தை எட்டியதுடன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (10 விக்கெட்), மொயீன் அலி (7 விக்கெட்), பதிரானா, தீக்ஷனா ஆகியோர் கலக்கி வருகிறார்கள். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் மிரட்ட அவர்கள் காத்திருக்கிறார்கள்.
- 17:59 (IST) 27 Apr 2023‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.