IPL 2023, CSK vs GT Tamil News: 16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. இரவு 7:30 மணிக்கு அரங்கேறிய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் 92 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விருதிமென் சஹா 25 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 63 ரன்கள் குவித்தார். இறுதியில், 19.2 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
தோல்வி காரணம்
சென்னை அணியின் தோல்விக்கு பொதுவாக 2 முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகிறது. ஒன்று அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மற்றொன்று அவர்களின் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தும் குஜராத் பேட்டர்கள் மீது அழுத்தம் கொடுக்கத் தவறி இருந்தனர்.
சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து பெரும் நம்பிக்கையை கொடுத்தார். அதேபோல் மொயீன் அலி தனது பங்கிற்கு சிறப்பாக ஆடினார். அவர் ஆட்டமிழந்த போதிலும், களத்தில் இருந்த ருதுராஜ் அதிரடியாக அரைசதம் அடித்தார். இதனால், ஸ்கோர் 200 ரன்களை எட்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், 9 சிக்ஸர்களை பறக்க விட்ட ருதுராஜ் 92 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இது பிற்பகுதியில் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த முதன்மை காரணமாக இருந்தது.
அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் தோனி 7 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 14 ரன்கள் எடுத்தார். ஆனால், அவருக்கு முன் களத்தில் விளையாடிய சிவம் துபே 18 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்தார். அவர் முகமது ஷமி பந்தில் 97 மீட்டர் நீளமான சிக்ஸரை பறக்க விட்ட நிலையில், அடுத்த பந்திலேயே மீண்டும் ஜெயில்பிரேக் ஷாட்டுக்கு செல்ல முயன்று ஆட்டமிழந்தார்.
துபே ஷார்ட் பந்துக்கு எதிராக கொஞ்சம் அதிகமாவே திணறினார். அவர் விளையாடிய எல்லா பந்துகளையும் தவறாகக் கணித்தார். அவர் அடித்த பந்துகளில் 2 பந்துகள் வீரர்கள் இல்லாத இடத்தில் (நோ-மேன்ஸ் லேண்ட்டில்) விழுந்ததால் அவுட் ஆகுவதில் இருந்து தப்பித்தார். அவரது இந்த மந்தமான சென்னை அணி ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் அவர் தான் சென்னை அணியின் தோல்விக்கு முதற்காரணம் என்றும் கூறிவருகின்றனர்.
We Had Lost This Match Because Dube And Rayudu .Especially Shivam Dube .Because He Had Wasted The Lots Of Balls And Overs. So Especially Kindly Drop These 2 Players In Upcoming Every Matches
— Sam (@samkutty865) April 1, 2023
Shivam Dube just retire hurt man. What a selfish cricketer. Thank God, we have sleeper cell in Vijay Shankar ik opposite team. Or else we'd be screwed
— VRS (@azizdopleganger) March 31, 2023
Every time Shivam Dube bats, I remember this meme pic.twitter.com/X6JWU1XJh2
— crazystalker🇮🇹 (@nanakostan) March 31, 2023
Because of Shivam Dube:
-Gaikwad lost his momentum to score hundred.
-Jaddu lost his wicket.
-Dhoni fans not able to see more than 1 six.
-CSK lost their momentum and gave below par target(yes its below par for this pitch).
-CSK lost their opening match against GT.#CSKvsGT pic.twitter.com/VEMHDeFLpF— 𝐑𝐮𝐠𝐠𝐚™ (@LoyalYashFan) March 31, 2023
Shivam Dube pic.twitter.com/ANR4HowEKz
— ABBA Fan (@_Blindinho_) March 31, 2023
பந்துவீச்சில் குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு இருந்து. ஆனால், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் அதை தவற விட்டு இருந்தனர். குறிப்பாக, அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஷுப்மான் கில் ஆட்டமிழந்து வெளியேறியபோது அவர்கள் 138/4 என பின்னடைவை சந்தித்தனர். அந்த தருணத்தில் 2 நோ-பால் வீசப்பட்டு ஃப்ரீ ஹிட்கள் வழங்கப்ட்டன.
சென்னை அணியின் இம்பேக்ட் ப்ளேயர் துஷார் தேஷ்பாண்டே, 3.2 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து மறக்க முடியாத தொடக்க ஆட்டத்தை பெற்றார். ஐபிஎல் 2023 இன் முதல் இம்பேக்ட் ப்ளேயராக அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக களமாடிய தேஷ்பாண்டே தனது முதல் ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார். நோ-பாலில் ஒரு பவுண்டரி, அதற்கு கொடுக்கப்பட்ட ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் என ரன்களை வாரி வழங்கினார்.
அவரிடம் வேகம் இருந்தபோதிலும், தனது லயன் அல்லது லென்த்தைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார் தேஷ்பாண்டே. கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றி 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை ஒயிடு வீசியும், அடுத்த பந்தை சிக்ஸர் கொடுத்தம் ஏமாற்றம் அளித்தார். அவரது 3வது பந்தில் ராகுல் தெவாடியா ஒரு பவுண்டரியை விரட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால், ரசிகர்கள் தேஷ்பாண்டே மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
May the universe ensure that every team's impact player results in negative consequences, just as Tushar Deshpande's move did. Let's hope for this immoral rule to d!e it's own natural death 🙏
— Prithvi (@Puneite_) March 31, 2023
Tushar Deshpande truly making an Impact 🙏 pic.twitter.com/rfuslUQmwV
— Div🦁 (@div_yumm) March 31, 2023
Hangargekar and Deepak Chahar putting all this masterclass just to see Tushar Deshpande ruining it all in the final over.
— Yash (@YashCSK_) March 31, 2023
இந்த ஆட்டத்திற்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி அமைதியாக இருந்தார். ஆனால் நோ-பால்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டினார். "பவுலர்கள் சிறப்பாக வருவார்கள் என்று நினைக்கிறேன், நோ-பால் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று,.எனவே நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இரண்டு இடது கை வீரர்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன், அதனால் நான் அவர்களை தேர்வு செய்தேன். சிவம் ஒரு விருப்பம், ஆனால் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளர்களுடன் நான் வசதியாக உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.