IPL DC vs SRH match score: நடப்பு ஐ.பி.எல் தொடரில் 34 வது போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஏப்ரல் 24) இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
Indian Premier League, 2023Rajiv Gandhi International Stadium, Hyderabad 05 June 2023
Sunrisers Hyderabad 137/6 (20.0)
Delhi Capitals 144/9 (20.0)
Match Ended ( Day – Match 34 ) Delhi Capitals beat Sunrisers Hyderabad by 7 runs
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பில் சால்ட் களம் இறங்கினார்கள். புவனேஷ்குமார் வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் ஹெயின்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து வந்த, மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். இவர் 15 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜன் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கான் வார்னர் உடன் ஜோடி சேர்ந்தார்.
நிதானமாக விளையாடிய டேவிட் வார்னரும் 20 பந்தில் 21 ரன் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, சர்ஃப்ராஸ் கான் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்தில் புவனேஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அமன் ஹகிம் கான் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில், அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். ஆனால், மனீஷ் பாண்டேவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர்.
ஆனாலும், அடுத்தடுத்து விக்கேட்டுகளை இழந்து தடுமாறிய, டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ஹேரி புரூக் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் சர்மா 5 கேப்டன் மார்க்ரம்3 என அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய மயங்க் அகர்வால் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் குல்சன் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்தாலும், 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் 24 ரன்களும், ஜென்சன் 2 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
டெல்லி அணி தரப்பில் நேர்க்கியா அக்சர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“