scorecardresearch

PBKS vs LSG Highlights: லக்னோ மிரட்டல் பந்துவீச்சு; 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது!

IPL 2022 PBKS vs LSG match Highlights in tamil: பஞ்சாப் அணிக்கு எதிரான மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Tata IPL 2022, PBKS vs LSG Live Score Updates
Tata IPL 2022 Punjab Kings vs Lucknow Super Giants Live Cricket Score

IPL 2022 PBKS vs LSG Highlights: 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 42வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங் அகர்வால் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த தொடக்க வீரரும் லக்னோ அணியின் கேப்டனுமான கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை விரட்டி 6 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த தீபக் ஹூடா தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தார். பொறுமை கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசிய டி காக் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை ஓடவிட்ட தீபக் ஹூடா 34 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறி நிலையில், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட துஷ்மந்த சமீரா அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 153 ரன்களை சேர்த்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்கம் முதலே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் வேகத்தில் மிரட்டிய ரபாடா 4 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 5 ரன்கள் எடுத்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கி அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய நிலையில், 28 பந்துகளில் 5 பவுண்டரிகளை துரத்திய ஜானி பேர்ஸ்டோவ் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பந்துவீச்சில் மிரட்டி எடுத்த லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலே நீடிக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொஹ்சின் கான்

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்:

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்

Indian Premier League, 2022Maharashtra Cricket Association Stadium, Pune   22 March 2023

Punjab Kings 133/8 (20.0)

vs

Lucknow Super Giants   153/8 (20.0)

Match Ended ( Day – Match 42 ) Lucknow Super Giants beat Punjab Kings by 20 runs

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
23:13 (IST) 29 Apr 2022
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 31 ரன்கள் தேவை.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 31 ரன்கள் தேவை.

23:09 (IST) 29 Apr 2022
8 விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 37 ரன்கள் தேவை.

22:46 (IST) 29 Apr 2022
தொடரும் விக்கெட் சரிவு; மீண்டும் நிதானம் காட்டும் பஞ்சாப்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 92 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 34 பந்துகளில் 62 ரன்கள் தேவை.

22:34 (IST) 29 Apr 2022
சிக்ஸர்களை பறக்கவிட்ட லிவிங்ஸ்டோன் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 18 ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டோன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

22:27 (IST) 29 Apr 2022
3 விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப்; 10 ஓவர்கள் முடிவில்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 87 ரன்கள் தேவை.

22:14 (IST) 29 Apr 2022
ராஜபக்சே அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 58 ரன்கள் சேர்த்துள்ளது.

மிடில்-ஆடர் வீரர் பானுகா ராஜபக்சே 9 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

22:12 (IST) 29 Apr 2022
தவான் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்துள்ளது

அணிக்கு வலுவான தொடக்க கொடுக்க முயற்சி செய்த ஷிகர் தவான் ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கி 5 ரன்னில் அவுட் ஆனார்.

22:03 (IST) 29 Apr 2022
கேப்டன் மயங் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 90 பந்துகளில் 118 ரன்கள் தேவை.

22:01 (IST) 29 Apr 2022
கேப்டன் மயங் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் மயங்க் அகர்வால் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 90 பந்துகளில் 118 ரன்கள் தேவை.

21:32 (IST) 29 Apr 2022
வேகத்தில் மிரட்டிய ரபாடா; பஞ்சாப்புக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் எடுத்தனர்.

தொடக்கம் முதலே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் வேகத்தில் மிரட்டிய ரபாடா 4 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் அணி துரத்தி வருகிறது.

20:26 (IST) 29 Apr 2022
10 ஓவர்கள் முடிவில் லக்னோ!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது ரன் சேர்க்க தடுமாறி வரும் அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 35 ரன்களுடனும், தீபக் ஹூடா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

20:06 (IST) 29 Apr 2022
கேப்டன் ராகுல் அவுட்; முதல் விக்கெட்டை இழந்த லக்னோவுக்கு நல்ல தொடக்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ராகுல் ஒரு பவுண்டரியை விரட்டி 6 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

தற்போது 6 ஓவர்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களை சேர்த்துள்ளது.

19:34 (IST) 29 Apr 2022
ஆட்டம் இனிதே ஆரம்பம்!

பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் – கேப்டன் கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

19:15 (IST) 29 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்!

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

19:15 (IST) 29 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்!

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொஹ்சின் கான்

19:13 (IST) 29 Apr 2022
டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு; லக்னோ முதலில் பேட்டிங்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் 42வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யும்.

18:44 (IST) 29 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), மணீஷ் பாண்டே, க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.

18:44 (IST) 29 Apr 2022
பஞ்சாப் கிங்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா.

18:38 (IST) 29 Apr 2022
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(வ), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங், பென்னி ஹோவெல், பானுகா ராஜபக்சே, சந்தீப் சர்மா, ரிஷி தவான், பால்தேஜ் சிங், ரிட்டிக் சாட்டர்ஜி, பிரேரக் மன்கட், இஷான் போரல், அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், அன்ஷ் படேல், ராஜ் பாவா.

18:38 (IST) 29 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, குயின்டன் டி காக், ரவி பிஷ்னோய், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், அங்கித் ராஜ்பூட், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ், கரண் சர்மா, கிருஷ்ணப்ப கவுதம், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர்.

18:37 (IST) 29 Apr 2022
7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் 42வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

18:18 (IST) 29 Apr 2022
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Tata ipl 2022 pbks vs lsg live score updates

Best of Express