scorecardresearch

டிம் டேவிட் ரன்-அவுட்; பேரதிர்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் மகள்!

Sara Tendulkar’s Reaction To Tim David’s Run-Out In Nail-Biter vs SRH is going Viral Tamil News: மும்பை அணியில் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 46 ரன்கள் சேர்த்த டிம் டேவிட் பரிதமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

Tim David's awful Run-Out, Sara Tendulkar's Reaction goes viral
MI VS SRH: Sara Tendulkar

IPL 2022 Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆஃப் சுற்று நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 76 ரன்களும், பிரியம் கார்க் 42 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 38 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 194 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்னிலும், தொடக்க வீரர் இஷான் கிஷன் 43 ரன்னிலும், டிம் டேவிட் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டிம் டேவிட் ரன்-அவுட்…

இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஜோடியான கேப்டன் ரோகித் சர்மா – இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அணியின் ரன் ரேட்டை மளமளவென உயர்த்தி ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், மிடில்- ஆடரில் களமாடிய டிம் டேவிட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 46 ரன்கள் சேர்த்த அவர் பரிதமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

பேரதிர்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் மகள்…

டிம் டேவிட் இப்படி ரன்-அவுட் ஆகியது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும், அவர் ரன்-அவுட் ஆனது மும்பை அணி ரசிகர்களுக்கு இடியாக அமைத்தது. இந்த ஆட்டத்தை அரங்கில் இருந்து ரசித்துக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, துரதிர்ஷ்டவசமான முறையில் டிம் டேவிட் அவுட் ஆகி வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

டேவிட் டக்அவுட்டுக்கு நடந்து கொண்டிருந்தபோது, ​​சாரா அமர்ந்திருந்த ஸ்டாண்டை நோக்கி கேமரா சென்றது. அப்போது சாரா செய்த முகபாவனை பதிவு செய்யப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Tim davids awful run out sara tendulkars reaction goes viral

Best of Express