PBKS vs LSG IPL 2023 Live Score in Tamil: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெற்று வரும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது.
Indian Premier League, 2023Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali 31 May 2023
Punjab Kings 201 (19.5)
Lucknow Super Giants 257/5 (20.0)
Match Ended ( Day – Match 38 ) Lucknow Super Giants beat Punjab Kings by 56 runs
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் ராகுல் கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய பதோனி மேயர்ஸூடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 54 ரன்கள் குவித்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டொயினிஸ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் லக்னோ அணியின் ஸ்டோர் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய பதோனி 24 பந்துகளில் தலா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்கள் குவித்து லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஸ்டோயினிசுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அசுர வேகத்தில் அடித்து ஆடிய ஸ்டோயினிஸ் 40 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 42 ரன்கள் குவித்து சாம்கரன் பந்துவீச்சில் வீழ்ந்தார். பூரன் 19 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் குவித்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. 2023 ஐபிஎல் தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஹோடா 11 ரன்களும், குணால் 5 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில், ரபாடா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், சாம்கரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தார். 2 பந்துகளை சந்தித்த அவர் 1 ரன்னில், ஸ்டொயினிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதர்வா டைடு ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரபசிம்ரன் சிங் 9 ரன்களில் நவீன் உல் ஹாசன் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா அதர்வாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி சற்று விரைவான ரன்கள் சேர்த்தது. 3-வது விக்கெட்டக்கு இந்த ஜோடி 78 ரன்கள் சேர்த்த நிலையில், 22 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்த சிக்கந்தர் ராசா யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அதர்வா, 36 பந்துகளில் 8 பவுணடமரி 2 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 23 (14), சாம்கரன் 21 (11), ஜித்தேஷ் 24 (10) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கை தாண்டினர் . மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், நவீன் 3 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளும், ஸ்டொயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil